பிரேமதாசா மறைந்து கடந்த 22 வருடங்களுக்குள் இம்முறைதான் அவரின் ஒரு நினைவு தினத்திற்காக ஒரு நாட்டின் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்துகொண்ட பெருமை என்னையே சாரும் எனக் கூறினார். மேற்கண்டவாறு மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 22 நினைவுதின வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
ஏழை மக்களின் நாயகனாக வாழ்ந்து அந்த மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒரு தலைவர் தான் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச.
இந்த வைபவத்திற்கு நான் வந்ததையிட்டு திருமதி கேமா பிரேமதாசா அவர்கள் “ பிரேமதாசா மறைந்து கடந்த 22 வருடங்களுக்குள் இம்முறைதான் அவரின் ஒரு நினைவு தினத்திற்காக ஒரு நாட்டின் ஜனாதிபதி பிரதம அதிதியாக வந்த பெருமை என்னையே சாரும் எனக் கூறினார். அதனையிட்டு நானும் மிகவும் சந்தோசமடைகின்றேன்.
மேற்கண்டவாறு மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 22 நினைவுதின வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். இந் நிகழ்வில் பிரதம மநிதிரி மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
நான் பொலனறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் முதன் முதலில் 1989ம் ஆண்டு வந்தபோது மறைந்த ரணசிங்க பிரேமதாச அவர்களே அப்பொழுது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
அத் தருணத்தில் அவர் சகல கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து சகலருக்கும் தத்தமது மாவட்டத்தில் அபிவிருத்திக்காக வருடாந்தம் 25 லட்சம் ரூபாவை ஒதுக்கித் தந்தார். அவர் வீடமைப்பு மற்றும் ஜனசவிய போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்.
அவரின் புதல்வர் சஜித் பிரேமதாசாவும் அவரின் அடிச்சுவட்டை பின்தொடாந்து வரும் ஒர் இளம் அரசியல்வாதி. அவரும் ஏழை மக்களின் ஒரு சிறந்த சேவையாளர்.
இந்த நாட்டின் ஏழைமக்களின் துயர் துடைப்பதற்கே அவருக்கு வீடமைப்பும் சமுர்த்தி அமைச்சினை பிரதமர் ரணிலுடன் கலந்துரையாடி வழங்கினோம்.
ஜனாதிபதி ஆர் பிரேமதாசா அவர்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஒரு ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் ஏழை மக்களுக்காக பாரிய சேவையை செய்த ஒரு தலைவர். எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வின்போது ஜனாதிபதி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஹேமா பிரேமதாச துலாஞ்சலி ஜயக்கொடி, சஜித் பிரேமதாச கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பூச்செண்டு வைத்து ஆசீர்வதித்தனர்.
இவ் வைபவத்தின போது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு மாவட்டத்தில் மின்சாரம் அற்ற 37 குடும்பங்களுக்கு “சோலர் பவர்” இயந்திரங்கள், மற்றும் கொழும்பு மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் 100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்திட்டம், வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் சுயதொழில் கடன்கள் போன்றவைகளும் அங்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
May First - Labours Day
Geen opmerkingen:
Een reactie posten