தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 mei 2015

இதோ அதிர்ச்சித் தகவல்கள் வட பகுதியில் இரசாயன ஆயுதப் பிரயோகம்.

இந்தத் தலையங்கத்தைப் பார்த்ததும் உங்கள் நினைவுகள் 2009 இற்குச் சென்றுவிடும். இலங்கையில் மக்களுக்காகக் குரல்கொடுத்த பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்; பலர் காணாமற் போகச் செய்யப்பட்டார்கள்.

மகிந்த இராஜபக்சவும் அவரது சகோதரர்களும் தமிழர்களை மட்டுமல்ல அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள சிங்களவர்களையும் அழிப்பார்கள் என்று எழுதிய லசந்த விக்கிரமதுங்க 2009 சனவரி 8 இலே கொல்லப்படுகிறார்.
விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்த வன்னிப் பெருநிலத்தின் மீது மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இந்த நூற்றாண்டின் இரகசியக் கொலைக்களங்களை விட்டுச் சென்ற மக்களுக்கெதிரான மிகவும் வெட்கக்கேடான யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதை வெளிப்படுத்தியவரும் லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தில் பத்தி எழுத்தாளராகவும் கேலிச்சித்திர ஆசிரியராகவும் இருந்த பிரகீத் எக்னெலியகொட 2010 இலே இலங்கையின் சனாதிபதித் தேர்தலுக்கு 2 தினங்கள் முன்னதாக அதாவது சனவரி 24 இல் காணமற் போகச் செய்யப்படுகிறார்.Jaffna 01Jaffna 02Jaffna 03Jaffna 04Jaffna 05Jaffna 06Jaffna 07
இன்று வன்னி யுத்தம் நிறைவடைந்து 6 ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகத் தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள். தங்களது பிள்ளைகளை‚ கணவன்மாரை படையினரிடம் ஒப்படைத்த தாய்மாரும்‚ வெள்ளைவானில் கடத்தப்பட்ட பிள்ளைகளைத் தேடி அலையும் பெற்றோரும் சகோதரனைத் தேடும் சகோதரிகளும் சனவரி 8 ‚ 2015 இற்குப் பின்னர் வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
தமிழர்கள் நிலத்தை மீட்கப் போராடினார்கள். இன்று நீருக்காகப் போராட முடியாத நிலையில் உள்ளனர். தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்துவோர் தமிழ்மக்களை படுகுழியில் தள்ளுகின்றனரோ என்ற ஐயம் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நீருடன் கலக்கப்பட்டுள்ள மெல்லக் கொல்லும் இரசாயனம் யாழ்ப்பாண மக்களின் உணவுடன் – உடலுடன் சேர்ந்தமை பற்றிய எமது ஆய்வினை இங்கு முன்வைக்கின்றோம்.
சுன்னாகம் மின்சாரசபை வளாகத்தில் புதைக்கப்பட்ட மின்னுற்பத்திக்குப் பயன்படுத்திய கழிவு எண்ணெயும் அதில் கலந்துள்ள நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனப் பதார்த்தங்களும் வலிகாமம் நீர்ப்படுக்கையுள் கலந்தமை பற்றிய எமது தேடலின் சாராம்சமே இவ் ஆவணம்.
இதற்காக ஒருமாத காலம் பயணங்களை மேற்கொண்டோம். அரச அதிகாரிகள்‚ உள்ளூர் ஊடகவியலாளர்கள்‚ வலிகாமம் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தோம்.
நாமும் எமது உதவியாளர்களும் நெருக்கடியை சவாலை எதிர்கொண்டது தமிழ் அரசியல்வாதிகளாலும் உயர்பதவியில் இருக்கும் சில அரச அதிகாரிகளாலுமே என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
பொதுமக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்கும் அப்பால் ஒரு இனத்தையே அழிக்கும் மெல்லக் கொல்லும் விசம் குறித்து மக்களை எச்சரிக்காது மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறும் மருத்துவர்களை அரசியல்வாதிகளான அதிகாரிகள் அச்சுறுத்துவது என்பது தென்பகுதியைச் சேர்ந்த எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துன்னானவிலும் ரதுபஸ்ஸ வலவிலும் இப்படி ஒரு நிலையை நாம் காணவில்லை.
வலிகாமத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் கிணற்றுநீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமையை அறியாது குடிப்பதற்கும் உணவுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பில் விழிப்புணர்வு அற்றே உள்ளனர்.
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான தயா சோமசுந்தரம் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறாது மறைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
புகுஷிமா அழிவுகள், செர்னோபில் அணு பேரழிவுகள், போபால் விச வாயு கசிவு போன்ற ஏனைய இடங்களில் நடந்த சுற்றுச் சூழல் பேரழிவுகளைப் போல வலிகாமம் மக்களும் பாதுகாப்பான சுற்றுச் சூழலை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எதிர்வு கூறியிருக்கிறார்.
யாழ்குடாநாடும் நன்னீர்ப்படுக்கைகளும்
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான நன்னீர்ப் படுக்கைளில் வலிகாமம் பிரிவிலுள்ள சுன்னாகம் மற்றும் அதன் அயற் பிரதேசம் முதன்மையானது. (Chunnakam aquifer is the main lime stone aquifer of Jaffna Peninsula.) வடமராட்சி கிழக்கின் வல்லிபுரம் மற்றும் மணற்காட்டுப் பிரதேசத்திலும் தென்மராட்சியிலும் நன்னீர்ப்படுக்கைகள் காணப்படுகின்றன.
தீவகத்தின் சாட்டி மற்றும் அல்லைப்பிட்டியும் குடிப்பதற்குகந்த நன்னீர்ப் படுக்கைகளைக் கொண்டுள்ளது. இவை நான்குமே குடாநாட்டுக்குத் தேவையான நீர் வழங்கிகள்.
இலங்கையைின் ஏனைய பிரதேசங்களைவிட முதன்மையான நிலக்கீழ் நன்னீர்ப் படுக்கை சுன்னாகத்தினைச் சூழ்ந்த வலிகாமத்தில் காணப்படுகிறது.
வலிகாமத்து நன்னீர் இப்பிரதேச மக்களுக்கு இயற்கை தந்த வரப்பிரசாதம். இன்று இந்த நீர் மூலம் மாசுபடுத்தப்பட்டுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தீர்ந்து போகததும் குடிப்பதற்கு உகந்ததுமான மிகச்சிறந்த நன்னீர்ப்படுக்கையே சுன்னாகத்தில் உள்ளது. இந்நீர்ப் படுக்கை பிற பகுதிகளுக்கும் வழங்கத் தக்க கற்பகதருவை ஒத்தது.
சுன்னாகம் நன்னீர்ப்படுக்கையின் எல்லைகளாக சங்குவேலி‚ அச்சுவேலி‚ நீர்வேலி‚ திருநெல்வேலி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பிரதேசங்களில் நிலத்திற்கு அடியில் காணப்படும் சுண்ணக்கற் பாறைகளே சமுத்திரம் போன்ற நீரைத் தேக்கிவைத்துள்ளது.
1990கள் வரை சுன்னாகத்தில் இருந்து தண்ணீர்‚ புகையிரதம் மூலம் காங்கேசன் துறை முதல் மதவாச்சி வரை புகையிரத நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.
இங்கிருந்தே காரைநகருக்கும் வேறு தீவுகளுக்கும் அண்மைக்காலம் வரை நீர் விநியோகம் நடைபெற்றது.
சுன்னாகம் மின்னிலையமும் ஒயில் குளமும்
சுன்னாகத்தில் மின் உற்பத்தி செய்யும் உப மின்நிலையம் 1958 இல் ஆரம்பிக்கப்பட்து. 1990 கள் வரை இங்கு மின் உற்பத்தி சீரான முறையில் நடைபெற்றது.
இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் (1987 – 1989) மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலால் எண்ணெய்த் தாங்கி சேதமடைந்து எண்ணெய் நிலத்திலே சிந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த எண்ணெயால் அயலில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த முறைப்பாடும் ஏறத்தாழ 20 வருடங்களில் கிடைத்ததில்லை என்கிறார் சுன்னாகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரச ஊழியரான நடராசா.
1990 களின் முற்பகுதியில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் எண்ணெய்த் தாங்கிகள் சேதமடைந்தாக இங்கு பணிபுரிந்த பொறியியலாளர் தெரிவிக்கின்றார். எனினும் அது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தத்தக்க அனர்த்தமல்ல என்றும் கூறுகின்றார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து 1995 பிற்பகுதியில் யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்னர் 1996 முதல் யாழ்குடாநாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதி கூல்எயர் என்ற நிறுவனத்தின் மூலம் காங்கேசன் துறையிலிருந்து விநியோகிக்கப்ட்டு வந்தது. சுன்னாகதத்திலிருந்து 2002 முதல் கூல்எயர் நிறுவனம் அல்ஸ்ரோம் நிறுவனத்தடன் இணைந்து 20 MW மின்சாரத்தை உற்பத்தி செய்து யாழ்குடாநாட்டுக்கு வழங்கி வந்தது.
காலத்துக்குக் காலம் இலங்கை மின்சார சபை வெவ்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து மின்சாரத்தை பெற்றுள்ளது.
2003 முதல் 2012 டிசம்பர் வரை சுன்னாகத்தில் இலங்கை மின்சாரசபைக்காக அக்றிக்கோ நிறுவனம் மின்னுற்பத்தியில் ஈடுபட்டது. சுன்னாகத்தில் 2007 இல் நொதேண் பவர் நிறுவனம் 6 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 6 இராட்சத மின்பிறப்பாக்கிகளை பொருத்தி 2008 ஏப்பிரல் ஓராம் திகதியில் இருந்து மின்னுற்பத்தி செய்ய ஆரம்பித்தது.
இக்காலப் பகுதியில் ஏறத்தாள 150 சீனர்கள் இங்கு பணிபுரிந்தார்கள். சீன அரசு வடக்கிலே சுன்னாகத்தில் மின்னுற்பத்தி செய்யும் மின்பிறப்பாக்கிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்ட அதேவேளை தெற்கிலே அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.
நொதேண் பவர் நிறுவனம் வெளியேறும் கழிவு ஒயிலை வெறும் நிலத்திலே விட்டது. நிலத்திலே விடப்பட்ட ஒயில் வடிந்து சென்று அங்கிருந்த கிணற்றினை நிறைத்தது.
23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுன்னாகம் மின்னிலைய வளாகத்தில் ஒயில் குளம் ஒன்று இருப்பது 2012 இல் தெரிய வந்தது.
இன்று கழிவு ஒயில் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட பல கிணறுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.


நிலத்தடியிலே பாரிய கழிவு ஒயில் சேமிப்புத் தாங்கிகள் அமைக்கப்பட்டு அவை கொங்கிறீற்றினால் மூடப்பட்டு அவற்றுக்கு மேலே மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டு மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேறும் கழிவு ஒயில் நேரடியாக நிலத்திலே இறங்குமாறு செய்யப்பட்டுள்ளன. இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை வெறும் கண்ணால் அவதானித்து கண்டறிந்து விடமுடியாது.
http://www.jvpnews.com/srilanka/107248.html
JaffnaJaffna 12Jaffna 11Jaffna 08Jaffna 09Jaffna 10

Geen opmerkingen:

Een reactie posten