தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 mei 2015

இறுதிக்கட்ட போரின் போதே பாலசந்திரன் கொலை செய்யப்பட்டார்: சரத் பொன்சேகா



ஜனாதிபதி மைத்திரி தலைமையில் போர்வெற்றி விழா
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 01:51.38 PM GMT ]
நாட்டில் பயங்கரவாதத்தை முடிவூக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ரணவிரு தின விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை மாத்தறை கடற்கரையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபயக்கோன், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பி. டி. யு. டி. பஸ்நாயக மற்றும் முப்படை தளபதிகள் , அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


இறுதிக்கட்ட போரின் போதே பாலசந்திரன் கொலை செய்யப்பட்டார்: சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 12:45.43 PM GMT ]
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசிய தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இது தொடர்பிலான தகவல்களை தெரிவித்துள்ளார்.
பாலசந்திரன் யுத்தத்தின் போது கொல்லப்பட்டாலும் அவரின் கொலைக்கு இராணுவத்தினரை பொறுப்பாளியாக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை பீல்ட் மார்ஷல் மீண்டும் முற்றாக நிராகரித்துள்ளார்.
பொது மக்களின் நன்மை கருதி நான்கரை மாதங்களாக சக்திமிகு ஆயுதங்களை முடிந்தளவு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இராணுவத்தினருக்கு வலியுறுத்தியிருந்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர் பொது மக்களின் நலனை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டிருந்தால் மிகவும் வேகமாக யுத்தத்தை வெற்றிக்கொண்டிருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவத்தினர் மிகவும் மெதுவாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்ததின் காரணமாகவே யுத்தத்தில் பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
4ம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அதிகாரிகள் மற்றும் ஆண்களை இழக்க நேரிட்டது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12வயது மகன் பாலசந்திரன் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருக்கலாம். எனினும் இதற்கு இராணுவத்தினர் பொறுப்பளிகளாக இருக்க முடியாத என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் முன்னாள் விடுதலை புலிகளின் கோட்டையில் எலும்புக்கூடுகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் என பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyFSdSUhs2D.html

Geen opmerkingen:

Een reactie posten