தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 mei 2015

ஜேர்மனில் அதிகரிக்கும் அகதிகள் மீதான தாக்குதல்: சர்வதேச மன்னிப்பு சபை கடும் கண்டனம்

ஜேர்மனி நாட்டில் அகதிகள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அந்நாட்டு அரசுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையை(Amnesty International) சேர்ந்த சுமார் 500 உறுப்பினர்கள் ஜேர்மனியில் உள்ள Dresden நகரில் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜேர்மனி நாட்டிற்குரிய சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளரான Selmin Caliskan கூறுகையில், ஜேர்மனியில் அதிகரித்து வரும் இனவெறி தாக்குதலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜேர்மனியில் அரங்கேறும் இனவெறி தாக்குதல், மக்களின் அடிப்படை உரிமைகளை காக்க தவறிய அரசு அதிகாரிகள் குறித்த ஆவணப்படம் ஒன்றை பிரித்தானியாவை சேர்ந்த சர்வதேச மன்னிப்பு சபை ஆராய்ச்சியாளர்கள் குழு தயாரித்துள்ளது.
ஜேர்மனியில் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறல், அகதிகள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்பாக தனது அமைப்பு சேகரித்துள்ள முக்கிய ஆதாரங்களை 2016ம் ஆண்டு வெளியிடப்படும் என Selmin Caliskan தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளே மனித உரிமைகளை மீறி செயல்படுவதால், மக்கள் தங்களுடைய குறைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் அவதியுற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகதிகள் மீதான தாக்குதல் குறித்து பேசிய Selmin Caliskan, ஜேர்மனியில் உள்ள தீவிர வலது சாரி அமைப்பான National Socialist Underground-வை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அகதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2000 முதல் 2006ம் ஆண்டு வரை இந்த அமைப்பினர் தாக்கியதில் 9 அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூரத்தை முற்றிலுமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை தவிர, அகதிகள் தங்கியுள்ள விடுதிகளில் தாக்குதல் நடத்துவதை தடுக்க சர்வதேச மன்னிப்பு சபை நடவடிக்கை எடுக்கும் என Selmin Caliskan உறுதியளித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்பு சபைக்கு ஜேர்மனியில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten