தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 mei 2015

மனித உரிமைகள் தொடர்பில் மௌனம் காத்த கெரி!

வடக்கில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன! காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது!- சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 09:34.53 AM GMT ]
வடமாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களினால் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன
இது விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க,
இலங்கையில் சட்டம் சொல்கிறது குற்றவாளியாக இருந்தாலும் கூட நீதிமன்றத்தை நாடி அவனுடைய நியாயத்தை சொல்லலாம் என்று. எனவே காட்டுச் சட்டங்களை சுட்டிக்காட்டாதீர்கள். 
அவ்வாறான காட்டுச் சட்டங்களை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது என சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதில் வழங்கியிருக்கின்றார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் சுன்னாகம் பிரதேச சபை தலைவர் எஸ்.பிரகாஷ் யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை குறைப்பதற்கான
நடவடிக்கை போதாது எனவும், கூறியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய காலத்தில் அவர்களுடைய இறுக்கமான சட்டங்கள் காரணமாக குற்றச் செயல்கள் குறைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதில் வழங்கியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
வாள்வெட்டுக் குழுக்களை கதாநாயகர்களாக மாற்ற வேண்டாம்: லலித் ஏ.ஜயசிங்க
யாழ்.மாவட்டத்தில் வாள் வெட்டு மற்றும் றவுடித்தனம் செய்யும் குழுக்கள் கைது செய்யப்படும்போது ஆவா குழு, மாத்தையா குழு என அவர்களுக்கு பெயர் சூட்டி அவர்களை கதாநாயகன்களாக மாற்றவேண்டாம். என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கே ட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஒரு முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர்.
அதாவது யாழில் றவுடித்தனம், மற்றும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்படும்,குழுக்களுக்கு பொலிஸார் ஆவா குழு, மாத்தையா குழு என பெயர் சூட்டுவதாக குற்றம்சாட்டியதுடன், அண்மையில் கைது செய்யப்பட் மாத்தையா குழு என்ற குழுவிலிருந்தவர்கள் அட்டகாசம் செய்து  கொண்டிருந்தபோது அங்கே பொலிஸ் சென்றதாகவும் அவர்கள் பொலிஸை பார்த்தவுடன் மாத்தயா எங்கிடம் வாள் இல்லை.
நாங்கள் ஒன்றும்  செய்யவில்லை என கூறியிருக்கின்றனர். அதனையடுத்து அவர்களுக்கு மாத்தையா குழு என பொலிஸார் பெயர் சூட்டிவிட்டதாக குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் இதனை மறுத்த சிரேஷ் ட பிரதி பொலிஸ்மா அதிபர் அவ்வாறான பெயர்களை அல்லது பட்டங்களை பொலிஸார் அவ ர்களுக்கு சூட்டுவது கிடையாது. ஆனால் அந்தப் பெயர்களை, மக்களே கொடுக்கின்றார்கள்.
மக்கள் கொடுப்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி அவர்களை கதாநாயகர்களாக மாற்றுகின்றன. எனவே சபையிலிருக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு இவ்வாறான குழுக்களை கதாநாயகர்களாக சித்தரித்து அவர்களுக்கு பெயர் சூட்டுவதை கைவிடுங்கள் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyFTZSUisyA.html

மனித உரிமைகள் தொடர்பில் மௌனம் காத்த கெரி
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 10:25.41 AM GMT ]
முன்னணி மனித உரிமை குழுவொன்றின் சார்பில் அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜோன் கெரி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஜோன் கெரி இலங்கை விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் நீதி மற்றும் பொறுப்பு கூறல் மையத்தினால் மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக தங்களுக்கு வெளிப்படுத்துமாறு குறித்த மின்னஞசலில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஊடகங்களினால் அம்பலப்படுத்தப்பட்ட திருக்கோணமலையில் உள்ள தடுப்பு முகாம் பற்றியும் குறிப்பிடுமாறு மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதி மற்றும் பொறுப்பு கூறல் மையத்தினால் 05 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் சட்டத்தரணியை நியமிக்கவும்.
போர்க்குற்றங்கள் தொடர்பான முறையீடுகளை விசாரணை செய்ய சிறப்பு இடங்கள் அமைத்தல்.
பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகளை பொழுது போக்காக வைத்துக்கொள்ளாமல் குற்றங்கள் மற்றும் தப்பித்தவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளல்.
சமூக தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர்களின் ஆலோசனைகளை ஆராய்தல். 
உண்மை மற்றும் நேர்மையானவர்களின் பாதுகாப்பிற்காக பயங்கரவாத தடைச்சட்டம், பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் குற்றபுலனாய்வு பிரிவுகளை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், ஜோன் கெரி இது குறித்து தன்னுடைய நிலைப்பாடு தொடர்பாக தெளிவான அறிக்கை ஒன்றினை வழங்கவில்லை என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyFTZSUisyC.html

Geen opmerkingen:

Een reactie posten