விசா பெற முனையும் வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில் போலி திருமண
பந்தங்களை ஏற்பாடு செய்த நபர்களுக்கு எதிராக பிரிஸ்பேர்ணில் விசாரணைகள்
முன்னெடுக்கப்படுகின்றன.
marriages2011ஆம், 2012ஆம் ஆண்டுகளில்
விசாவிற்காக திருமணத்தை ஏற்பாடு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
குடியேற்ற முகவர் சேட்டன் மோகன்லால் மஷ்ரூ என்பவருக்கும், திருமண
ஏற்பாட்டாளர் திவ்யா கிருஷ்ண கௌடா என்பவருக்கும் எதிராக 17
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
திரு.மஷ்ரூவிற்கு எதிராக அரச
உத்தியோகத்தர்கள் மீது அழுத்தம் தொடுத்தமை தொடர்பாக 19
குற்றச்சாட்டுக்களும், போலித் தகவல்களை வழங்கியமை தொடர்பாக 23
குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணையில்
சாட்சியம் அளித்த பெண்ணொருவர், திருமணத்திற்கு இணங்கியதன் மூலம் தாம்
எந்தளவுக்கு சட்டத்தை மீறியுள்ளேன் என்பதை தாம் அறிந்திருக்கவில்லை எனத்
தெரிவித்தார்.
தாம் அறிந்திராத இந்திய ஆடவரின் கரம் பற்றி அவருடன்
சேர்ந்து வாழ்வதற்காக தமக்கு 4000 டொலர் தொகையுடன், வாரத்திற்கு 250 டொலர்
கொடுப்பனவு வழங்கப்படுமென தஹ்னீ எட்சர் என்ற பெண்மணி குறிப்பிட்டார்.
|
Geen opmerkingen:
Een reactie posten