இலங்கையில் ஆட்சி மாற்றம் இன்று எல்லோர் மனங்களிலும் ஒரு மகிழ்சசியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் கடந்த 10 வருடகாலமாக இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு யார் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்று மகிந்த குடும்பம் கலங்கிப்போய் நிக்கின்றது.
2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பழிபாவங்களை மகிந்த குடும்பம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது இது தமிழ் மக்கள் மனங்களில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகள் பின்னணியில் இருந்தாலும் இந்த சந்தோசத்தின் முழுப்பலனையும் தமிழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
இங்கு சந்தோசம் என்று நான் குறிப்பிடுவது ஆட்சி மாற்றத்தினால் வந்த சந்தோசம் அல்ல, இறுதி யுத்தத்தின் போது கொத்துக்கொத்தாக கொத்துக்குண்டுகளால் எங்கள் உறவுகளை கொன்றொழித்த பாவியை ஆயுதத்தால் வீழ்த்த முடியாவிட்டாலும் வாக்குகளால் விழ்த்திய ஒரு மன ஆறுதல் மகிழ்ச்சி.
இந்த மாற்றத்திற்குப் பின்னர் பல மாறுதல் நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது குறிப்பாக வடக்கில் ஒரு சில மாற்றங்கள் நடைபெற்றாலும் தெற்கில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.
அதில் 19வது அரசியல் அமைப்பில் மாற்றம், தான் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடியான நடவடிக்கைகள் இந்த அதிரடியான மாற்றங்கள் தெற்கில் உள்ள மகிந்த ஆதரவு சிங்கள மக்கள் சிங்கள மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த நிலைமை தெற்கில் எவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தப் போகின்றது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டிய தேவையிருக்கின்றது.
தெற்கில் இனங்களுக்குகிடையே ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் குழப்பகரமான நிலைமையை வடக்கு அரசியல் தலைமைகள் எவ்வாறு தங்களுக்கு சாதகமான மாற்றப் போகின்றது என்ற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.
இருந்தாலும் இந்த மாற்றத்திற்குப் பின்னர் வடக்கில் நடைபெற்ற விரும்பத்தகாத சில சம்பவங்கள் தமிழ் அரசியலின் கீழத்தனமான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக சொல்லப்போனால் கொடும்பாவிகள் எரிப்பு என்பது சரி பிழைகளுக்கு அப்பால் தமிழ் அரசியலில் ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே பல அரசியல் அவதானிகள் பார்க்கின்றார்கள்.
ஏனெனில் கடந்த 30 வருடமாக நாட்டில் தமிழ் மக்களின் உரிமைக்கான நடைபெற்ற போராட்டத்தை சிங்கள பேரினவாதிகள் பயங்கரவாதமான சித்தரித்துக் கொண்டாலும் தமிழ் தலைவர்களின் உருவப்பொம்மைகளை எந்த சிங்கள தலைமையும் வீதியில் போட்டு எரிக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது இன்று பல்வேறு விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டு வருகின்றது இந்த விமர்சனங்கள் எல்லாம் உள் வீட்டுக்குள் இருப்பவர்களே செய்யும் நாசகார வேலை என்பது வெளிப்படையான உண்மை. இதனை யாரும் மறுத்து விடமுடியாது. அவ்வாறு செய்வது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதைப் போன்றது.
அண்மைக்காலமாக வடக்கில் முக்கியப்படுத்தப்படும் செய்தியாக வலிகாமம் பகுதியில் உள்ள கிணற்றுநீர்ப் பிரச்சினை. தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்றால் உடனே போராட்டம், அறிக்கை, என்று ஊடகங்களின் பக்கத்தை நிரப்புவது தொழிலாக மாறிவிட்டது.
இந்த குடிநீர் விவகாரம் உண்மையில் மக்கள் நலன் சார்ந்ததா அல்லது அரசியல் நோக்கம் கொண்டதா என்ற கேள்வி எழுப்புகின்ற போது அது அரசியல் நலன் சார்ந்ததே என்ற முடிவுக்கே வரமுடிகின்றது.
காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோருக்கான போராட்டங்கள் இன்று வடக்கில் மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் இதனை புரிந்து கொள்ளலாம்.
ஐநாவின் அறிக்கை தொடர்பில் ஐநாவை பிழையான திசையில் வழிநடத்துவதாக சுமந்திரனுக்கு எதிரான போராட்டம், வலி.வடக்கில் இருக்கின்ற வாக்குப்பலத்தை குறிவைத்து மாவையை ஓரம் கட்டுவதற்கு வலிகாமம் நீர் விவகாரம் என்று இந்த போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சினை கையில் எடுத்து செயற்படுத்தப்படுவது அரசியல் காரணத்திற்காவே இது மேற்கொள்ளப்படுகின்றது என்பதே வெளிப்படையான உண்மை.
இதனை வாசிப்பவர்கள் இது எனக்கு பிரச்சினையாக தெரியவில்லையா என்ற ஒரு கேள்வியைக் கேட்கலாம் ஆனால் இது அரசியலுக்கு அப்பால் எல்லோரும் சேர்ந்த செயற்படுத்தி தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாக இருக்கின்றது.
இந்த விடயத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்டி அடித்துக்கொண்டு இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஒரு ஆசனம் கிடைத்தால் போதும் என்ற ஒரு கோடபாட்டுடன் காய்களை நகர்த்துகின்றது.
தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு முக்கிய நபராக பார்க்கப்பட வேண்டியவர். இந்த போராட்டத்தில் தனது தந்தையை இழந்து கொள்கையில் இன்றுவரை உறுதியுடன் இருந்தாலும் கூட்டமைப்பை விட்டு வெளியேறி ஒரு வரலாற்றுத் தவறை அவர் செய்திருக்கின்றார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு முக்கிய நபராக பார்க்கப்பட வேண்டியவர். இந்த போராட்டத்தில் தனது தந்தையை இழந்து கொள்கையில் இன்றுவரை உறுதியுடன் இருந்தாலும் கூட்டமைப்பை விட்டு வெளியேறி ஒரு வரலாற்றுத் தவறை அவர் செய்திருக்கின்றார்.
அவ்வாறு அவரின் வெளியேற்றம் கூட இன்று கூட்டமைப்பு வேறு திசையில் பயணிக்க ஒரு காரணமாக இருக்கலாம். கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு பலம் மிக்க தமிழ் அரசியல் அமைப்பு.
இந்த அமைப்பை எதிர்காலத்தில் தாங்கி வழிநடத்தக் கூடிய ஒருவர் வெளியில் நிற்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் தேசிய உணர்வு மிக்கவர்கள் ஒரு சிலரில் உணர்ச்சி வசப்படும் அரசியல் வாதிகளாக இருக்கின்றார்கள்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில் உணாச்சி அரசியலுக்கு அப்பால் தெளிந்த அரசியல் சிந்தையுடன் செயலாற்றக் கூடிய ஒருவராக பார்க்கப்படும் நிலையில் கூட்டமைப்புக்குள் இணைந்து எதிர்கால அரசியலலை முன்னெடுப்பதே சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றது.
இன்று வடக்கில் உள்ள ஊடகங்கள் யாழ்ப்பாணத்தை மையாமாக் கொண்டே செயற்பட்டு வருகின்றது இதனால் என்னவோ யாழ்ப்பாணத்தில் குடிநீர் பிரச்சினை என்றாலும் சரி ஏனைய பிரச்சினை என்றாலும் சரி முன்டி அடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அண்மையில் குடிநீர் விவகாரம் தொடர்பான ஒரு ஆவணப்படம் வெளியாகியிருந்தது. இதில் வலி.வடக்கில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் ஓரு ஊடகவியலாளன் தனது பதிவைச் செய்திருக்கின்றார்.
இந்த குடிநீர் பிரச்சினையை விட மிக மோசமான நீர் பிரச்சினை வன்னியில் இருக்கின்றது. இது எந்த ஊடகங்களுக்கும், எந்த அரசியல் வாதிக்கும் தெரியவில்லை.
வலிகாமம் வடக்கில் பல பாடசாலைகள் இருக்கின்றது, இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சிந்திக்கும் நாங்கள், இதே பிரச்சனை உள்ள தண்ணீரைத்த்தான் வன்னி மக்கள் குடிக்கின்றார்கள் என்பதை ஏன் மறந்துபோனோம்.
நாங்கள் மறந்து போகவில்லை, யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் யாராவது வன்னியில் தேர்தல் கேட்டிருந்தால் இன்று வன்னியிலும் குடிநீர் விவகாரம் ஆவணப்படம் தயாரிக்கும் நிலை வரைக்கும் சென்றிருக்கும்.
2009ம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் பிறந்த பிள்ளைகள் இன்று ஏதோரு ஒரு குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கருவில் இருக்கும் போது தாய்மார் சுவாசித்த பொஸ்பரஸ் குண்டுகளின் வாயுக்கள் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியிருக்கின்றது.
புதுக்குடியிருப்பு, மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம் பகுதிகளில் வாழும் மக்கள் தாங்கள் பயன்படுத்திய கிணறுகளை மூடிவிட்டு புதிய கிணறுகளை பயன்படுத்தி வருகின்ற போதும் வசதி குறைந்தவர்கள் பழைய குடிநீரையே பயன்படுத்தி வருகின்றார்கள்.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் கிணறுகளில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதனை ஆய்வுக்குட்படுத்தி அதனை உறுதிப்படுத்தியும் இருக்கின்றார்கள்.
இங்கு வாழ்கின்ற மக்கள் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. போராட்டம் என்பதை உள்ளிருந்து பார்த்தவர்கள். பொதுமக்களின் பிரச்சினை என்றால் வெறுமனனே சுயநல அரசியலுக்கு அப்பால் பொது நோக்குடன் பார்த்து அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முன்வாருங்கள்.
இந்த விடயத்தில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து செயற்பட்டு உண்மைகளை வெளியில் கொண்டு வருதல் எமது இனத்தின் எதிர்காலத்திற்கு நன்றாக அமையும்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தெற்கில் நடைபெறும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை போன்று நாங்கள் இருப்போம் என்றால் தமிழ் அரசியல் கேள்விக்குறியாகும்.
தமிழர்களின் தலையில் வாறவன் போறவன் எல்லாம் மிளகாய் அரைத்துவிட்டுப் போவான்.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு ஒன்றுபட்டு எங்கள் இனத்தின் அரசியல் நிலையை முன்னெடுப்போம்.
சுதன்
Geen opmerkingen:
Een reactie posten