சுவிட்சர்லாந்தில் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால், அந்நாட்டு தேசிய மொழிகளில் ஒன்றை தெரிந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
சுவிஸ் ஆரம்ப பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு முன்பாக, முதன்மை மொழியாக ஜேர்மன், பிரான்ஸ் அல்லது இத்தாலி மொழியை கற்பிக்கும் வகையில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தலாமா என்ற பேச்சுவார்த்தை பல மண்டலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆரம்ப பள்ளிகள் மட்டுமின்றி பணி புரியும் அலுவலகங்களில் கூட சுவிஸ் தேசிய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆலோசனைகளும் விவாதங்களும் காரசாரமாக நடைபெற்று வருகிறது.
சுவிட்சர்லாந்து மாணவர்களுக்கு தேசிய மொழிகளான ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரோமானிய மொழிகளில் ஏதாவது ஒன்றை ஆங்கில மொழிக்கு முன்பாக கற்பிப்பதையே பெரும்பாலனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சுமார் 6188 நபர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றை தான் முதன்மையாக கற்பிக்க வேண்டும் என்று 61.1 சதவிகிதத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய மொழியை தவிர்த்து முதன்மை மொழியாக ஆங்கிலத்தை கற்பிக்க வேண்டும் என 34.5 சதவிகித மக்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இவர்களில் இத்தாலி மொழி பேசுபவர்களான சுமார் 90.9 சதவிகிதத்தினர் ஆங்கில மொழிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கியமாக ஆங்கில மொழி பேசுபவர்கள் கூட, சுவிஸ் தேசிய மொழிகளுக்கு தான் அதிக அளவில் ஆதரவு அளித்துள்ளனர்.
தற்போதைய சுவிட்சர்லாந்து சட்டம், சுவிஸ் மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் தேசிய மொழிகளில் ஏதாவது ஒன்று என இரண்டு மொழிகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகிறது.
ஆனால், சுவிஸின் பல மண்டலங்களில் ஆங்கிலத்திற்கு முன்பாகவே சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், இது தொடர்பாக புதிய சட்டம் விரைவில் வர வாய்ப்புள்ளதாகவும் மக்களிடையே கருத்து நிலவுகிறது.
ஆரம்ப பள்ளிகள் மட்டுமன்றி, பணிபுரியும் அலுவலகங்களில் கூட சுவிஸ் தேசிய மொழிக்கு முன்னுரிமை கொடுக்கலாமா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2069 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், சுவிஸ் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தேசிய மொழிகளில் ஒன்றை தெரிந்திருக்க வேண்டும் என சுமார் 75 சதவிகித நபர்கள் குறைந்த அல்லது முழுமையான ஆதரவை அளித்துள்ளனர்.
அதாவது, 53.3 சதவிகித நபர்கள் முழுமையான ஆதரவும், 21.8 சதவிகித நபர்கள் குறைந்த அளவு ஆதரவும் அளித்துள்ளனர்.
அதே போல், சுமார் 16 சதவிகித நபர்கள் மட்டுமே சுவிஸ் தேசிய மொழிகள் அல்லாத பிற மொழிகளை பணிபுரியும் இடங்களில் பயன்படுத்த ஆதரவு அளித்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வு முடிவுகள் சுவிட்சர்லாந்தில் உள்ள 26 மண்டல பள்ளிகள் மற்றும் பணிபுரியும் அலுவலகங்களில் விரைவில் சட்ட ரீதியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆய்வு மேற்கொண்டவர்கள் கூறியுள்ளனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten