தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 mei 2015

நல்லாட்சியிலும் எரிபொருள் விலை அதிகரிப்பா?

இலங்கையில் கைதிகளும் வேட்பாளராகும் வாய்ப்பு
[ புதன்கிழமை, 06 மே 2015, 04:40.28 AM GMT ]
நீதிமன்றத்தில் ஒருவருக்கெதிராக வழக்குத் தொடர்வதன் மூலம் அவர் கைது செய்யப்படுவதானது, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்காது என தேர்தல்கள் திணைக்கள உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரை தற்போதைய அரசாங்கம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
இவ்வாறு சிறையில் அகப்படுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என பல்வேறு தரப்பினரும் கருத்து குறிப்பிட்டுள்ளனர்.
ஒருவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, பின்னர் நீதிமன்றம் விசாரணை நடாத்தி அவரை ஒரு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கும் வரையில் அவர் நிரபராதியாகவே பார்க்கப்படுகின்றார்.
இவ்வாறு நிரபராதியாக இருப்பவர்களை வேட்பாளர்களாக நியமிப்பதில் தவறில்லை என குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஒருவர் இரு வருடத்துக்கு மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதில் ஆறு மாத காலத்தை சிறையில் கழித்து முடிந்த ஒருவருக்கே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை வலுப்படுத்த மகிந்தவை சந்திக்கும் மைத்திரி
[ புதன்கிழமை, 06 மே 2015, 05:28.37 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கம் குறித்து ஒரு போதும் கலந்துரையாட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறித்து மாத்திரமே குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இடையிலான சந்திப்பொன்று அவசியமென குமார வெல்கம மற்றும் டீ.பீ.ஏக்கநாயக்க ஜனாதிபதி வீட்டிற்கு சென்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும், பின்னர் தேரர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளதனாலும் இச்சந்திப்பு இடம் பெறவுள்ளதாக குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முக்கிய அரசியல் தீர்மானங்கள் பல எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் தொழிலாளர் அமைச்சருமான எஸ்.பீ. நாவின்ன தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் பிரதானமான நோக்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி பலமான அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதே எனவும் அவர் சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFTaSUis2H.html

நல்லாட்சியிலும் எரிபொருள் விலை அதிகரிப்பா?
[ புதன்கிழமை, 06 மே 2015, 05:01.17 AM GMT ]
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எரிபொருள் விலையை குறைத்த போதிலும் அதற்கு அறவிடப்படும் வரி குறைக்கப்படாமையின் காரணமாக எரிபொருள் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையிலேயே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கடந்த சில மாதங்களில் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 21 ரூபாவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 15 ரூபாவும் என எரிபொருள் கூட்டுத்தாபனம் 4 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எனினும் டீசல் விற்பனையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு திரைசேறியிடம் கோரிய போதிலும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
அதனால் அதற்கு மாற்று வழியாக எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிபொருள் கூட்டுதாபன அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFTaSUis2F.html


Geen opmerkingen:

Een reactie posten