தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 mei 2015

இலங்கை மீண்டும் மேற்குலகின் பொம்மையாக மாறியுள்ளது: ஹெகலிய ரம்புக்வெல்ல

இன்று படைவீரர் ஞாபகார்த்த விழா மாத்தறையில் கோலாகலம்! அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர்!
[ திங்கட்கிழமை, 18 மே 2015, 11:53.26 PM GMT ]
படை வீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா மற்றும் தேசிய படை வீரர் நினைவு தின பிரதான வைபவங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளன. 
படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு மாத்தறை நகரிலும், தேசிய படைவீரர் நினைவு தின பிரதான வைபவம் நாளை மாலை 4.00 மணிக்கு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.
நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முதற் தடவையாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், பிரதம நீதியரசர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், சமய தலைவர்கள். அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாத்தறை, கடற்கரை வீதியில் நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான வைபவத்தில் இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப்படையில் சுமார் 7 ஆயிரத்து 300 படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளருமான பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
இவ்விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் மாத்தறை கடற்கரை வீதி உட்பட மாத்தறை நகரம் எங்கும் தேசிய கொடி மற்றும் முப்படைகளினதும் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக காட்சியளிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க இம்முறை படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு நிகழ்வின் கட்டளை அதிகாரியாக செயற்படவுள்ளார்.
வழக்கம் போன்று இம்முறையும் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரது அணிவகுப்பு வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளதுடன் இம்முறை முதற் தடவையாக தற்போது சேவையிலுள்ள படைவீரர்களுக்கு மேலதிகமாக ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களும் அதிகாரிகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, தேசிய படை வீரர் நினைவு தின பிரதான வைபவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுரவில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவு தூபிக்கு அருகில் நடாத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
நாளை பிற்பகல் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இராணுவ சம்பிரதாய முறைப்படி இவை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தாய் நாட்டிற்காக உயிர் நீத்த, அங்கவீனமுற்ற படை வீரர்களை ஞாபகப்படுத்தி மரியாதை செய்ய வேண்டியது அனைவரினதும் கடமையாகும் அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் காணப்பட்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் இம்முறை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றது தொடக்கம் மே மாதத்தில் வெற்றி விழா அணிவகுப்பு என்று கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வாண்டு முதல் வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது. மாறாக யுத்தத்தினால் உயிர் நீத்த மற்றும் அங்கவீனமடைந்த படை வீரர்களை நினைவு கூரும் நிகழ்வாகவே அனுஷ்டிக்கப்படும் என அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய இவ்வாண்டு சகல செயற்பாடுகளும் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

புலி நினைவேந்தல் நிகழ்வுகளின் மூலம் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது!– சுசில் பிரேமஜயந்த
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 12:20.09 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளின் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து வடக்கில் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், தற்போதைய அரசாங்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அஞ்சவில்லை என்றே அர்த்தம்.
நாட்டில் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு தரப்புக்கள் அரசாங்கத்தை மதிப்பதில்லை.
இந்த அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் நல்லாட்சி அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது.
நாட்டுக்கு சுதந்திரத்தை வென்று கொடுத்த வெற்றியைக் கொண்டாடாது, பிரிவினைவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததனை நினைவு கூர்வதாகத் தெரிவித்து படைவீரர்களை அரசாங்கம் இழிவுபடுத்தி வருகின்றது.
வடக்கில் புலிகளை நினைவு கூர்ந்து விளக்கு ஏற்றி பல நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அரசாங்கத்தின் மறைகரமாக செயற்பட்டு வரும் பொலிஸ் நிதிக் குற்றவியல் பிரிவு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் தரப்பினரை மறுபுறத்தில் கைது செய்து வருகின்றது.
அரசியல் பழிவாங்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவர் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக புலி நினைவேந்தல் நிகழ்வுகள்
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 12:30.37 AM GMT ]
நீதிமன்றின் உத்தரவுகளை மீறி வடக்கின் பல இடங்களில் வெற்றிகரமாக தமிழீழ விடுதலைப் புலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினை மீறி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் விளக்கு ஏற்றியுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு வடக்கு முதல் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் விளக்கு ஏற்றி புலிகளை நினைவு கூர்ந்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூஜை வழிபாடுகள் மே;றகொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்தினுள் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை கொலை செய்தமை குறித்து சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரும் பெனர் ஒன்றும் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை, பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர் இராசகுமாரன் வழிநடத்தியுள்ளார்.
மட்டக்களப்பு வாகரை பகுதிகளிலும் நினைவேந்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyFSdSUhr5E.html

இலங்கை மீண்டும் மேற்குலகின் பொம்மையாக மாறியுள்ளது: ஹெகலிய ரம்புக்வெல்ல
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 12:52.56 AM GMT ]
மேற்கத்தைய நாடுகளுக்கு பொம்மையாக செயற்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்தார். எனினும் தற்போதைய ஜனாதிபதி மேற்குலக நாடுகளுடன் நட்புணர்வை பேணுகிறார் என ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தின்போது இலங்கையை பொம்மையாக செயற்படுவதற்கே மேற்கத்தைய நாடுகள் முயற்சித்தன. எனினும் அதனை ஏற்காது செயற்பட்டமை காரணமாகவே விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் படையினரும் இணைந்து தோற்கடித்தனர்.
எனினும் இன்று கடந்த சில மாதங்களுக்குள் நிலைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வடக்கில் இறந்துப்போன உறவுகளுக்காக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படலாம்.
ஆனால் சில அமைப்புக்கள் விடுதலைப்புலிகளை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வுகளை நடத்துவதாகவும் ஹெகலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFSdSUhr5I.html

Geen opmerkingen:

Een reactie posten