தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 mei 2015

"அகதிகளால் பிளவடையும் சுவிஸ்": சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்

கொசோவோ நாட்டு அகதிகளால் சுவிட்சர்லாந்து நாடு பிளவுபட்டு உள்ளது போல் சித்தரித்து வெளியிடப்பட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பழமைவாத வலது சாரி மக்களாட்சி கட்சியின்(Swiss People’s Party) தலைவரான Martin Baltisser மற்றும் அக்கட்சியின் துணை தலைவரான Silvia Bär ஆகியோர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
கொசோவோ நாட்டு அகதிகள் இரண்டு சுவிஸ் குடிமக்களை கத்தியால் தாக்குவது போல விளம்பரங்களை உருவாக்கி அக்கட்சியினர் மக்களிடையே பரப்பி வந்துள்ளனர்.
விளம்பரத்தில் ‘கொசோவோ அகதிகளால் சுவிஸ் நாடு பிளவுபட்டு உள்ளதாக’ குறிப்பிட்டு, கடந்த 2011ம் ஆண்டு கொசோவோ அகதிகளால் இரண்டு சுவிஸ் இளைஞர்கள் தாக்கப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விளம்பரத்தை அந்த கட்சியின் இணையதளத்தில் வெளியிட்டதுமில்லாமல், கடந்தாண்டு  பிப்ரவரி 9ம் திகதி அகதிகள் குறித்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின்போது மக்களிடையே SPP கட்சியினர் பரப்பி வந்தது புகாராக எழுந்தது.
இது அகதிகளிடையே இனப்பாகுபாடு பார்ப்பதுபோல் உள்ளதாக Martin Baltisser மற்றும் Silvia Bär மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றம் தொடர்பாக SPP கட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூரிச்சை சேர்ந்த David Gibor மற்றும் Tomas Poledna என்ற வழக்கறிஞர்கள் சுவிஸ் மத்திய நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.
ஆனால், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த SPP கட்சியினர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்களுக்கு எதிராக இந்த புகார்களை எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால், தற்போது அகதிகளிடையே இனப்பாகுபாடு ஏற்படுத்துவது போல் விளம்பரம் பரப்பியது உண்மை என நீதிமன்றம் உறுதி செய்து SPP கட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர் குற்றவாளிகள் தான் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள SPP கட்சி தலைவர்கள், இந்த சந்தேகத்திற்குரிய தீர்ப்பின் விரிவான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
http://www.coolswiss.com/view.php?20360aG220eZnBd34eaSmOln4cbdQgAAcddc4eMQUdbc4TlOmae42dBnZ3e033Ga0603

Geen opmerkingen:

Een reactie posten