தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 mei 2015

ஊடகவியலாளர்களுக்கு எதிரான மோசமான நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது

மொழிகளை கற்றுக்கொள்வதனால் ஒற்றுமை மேம்படும்: ருவான்
[ சனிக்கிழமை, 09 மே 2015, 06:13.58 AM GMT ]
இலங்கையில் 30 வருட யுத்தத்திற்கு பிரதான காரணம் மொழி பிரச்சினையாகும், தமிழ், சிங்கள மக்கள் இரு மொழிகளையும் கற்பதன் மூலம் சகோதரத்துவத்தை வளரத்துக்கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ், பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் தமிழ் மொழி பயிற்சியை நிறைவு செய்த 320 இராணுவ படை உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்களவர்களும் தமிழர்களும் மொழிகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த மொழிகளைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினரும், சிங்கள மக்களும் தமிழை கற்பதன்மூலம் தமிழ் மக்களை வெற்றிக்கொள்ளமுடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அடுத்தவர் மொழிகளை புறக்கணித்தமை காரணமாக இரண்டு இனங்களுக்கு இடையிலும் பிரிவினை ஏற்பட்டது, இது தீவிரவாத போக்குடையவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான மோசமான நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது
[ சனிக்கிழமை, 09 மே 2015, 06:48.30 AM GMT ]
ஊடவியலாளர்களை பாதுகாக்கும் கடப்பாட்டில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான நிலையில் உள்ளன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான சம்மேளனம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான சம்மேளனத்தின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஊடகவியலாளர்களின் இறைமை மற்றும் அவர்கள் கடத்தல், தாக்குதல் கொலை செய்யப்படுதல் என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுவதற்கான.
உறுதிப்பாட்டுக்கான முன்னெடுப்புக்கள் அவசியம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றவர்கள் சட்டத்துக்கு முன்நிறுத்தப்படவேண்டும் என்றும் அந்த சம்மேளனம் கேட்டுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சர்வதேசத்தில் 100 நாடுகளில் 6லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten