தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 mei 2015

ஜெகத் டயஸின் நியமனம் குறித்து கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் மறுப்பு

பல்வேறு தியாகங்களைச் செய்தே ஈழக் கொடியை வீழ்த்தி தேசிய கொடியை ஏற்றினோம்: மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 01:01.52 AM GMT ]
பல்வேறு தியாகங்களை செய்தே ஈழக்கொடியை வீழ்த்தி தேசியக்கொடியை ஏற்றினோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று விஹார மஹாதேவி பூங்காவில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
30 ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு இந்த நாட்டின் மைந்தர்கள் ஆயிரக் கணக்கில் உயிர்த் தியாகம் செய்து வரலாற்று ரீதியான வெற்றியை என்னுடனான குரோதம் காரணமாக நாட்டுக்கு கிடைக்காமல் போகச் செய்யக் கூடாது.
தேவை என்றால் என்னை பழிவாங்குங்கள், என்னை விமர்சனம் செய்யுங்கள், சேறு பூசுங்கள் போதவில்லை என்றால் என்னை சிறையில் அடையுங்கள்.
இறுதிப் போரின் போது எதிரிகளின் கொடியை கீழே வீழ்த்த ஆயிரக் கணக்கான தேசத்தின் மைந்தர்கள் உயிர்த் தியாகம் செய்ததுடன் பலர் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்.
பல்வேறு தியாகங்களைச் செய்து ஈழக் கொடியை வீழ்த்தி தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு படையினர் உயிர்த் தியாகம் செய்தது மீண்டும் பிரிவினைவாத கொடி ஏற்றப்படுவதனை காண்பதற்கல்ல. இவ்வாறான வீர மைந்தர்களை துரித கதியில் மறந்து போன இந்த அரசாங்கம் வெட்கித் தலை குனிய வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பிரதான நோய் மறதியாகும்!- புத்திக்க பத்திரண
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 01:09.35 AM GMT ]
அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பிரதான நோய் மறதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
இன்று சொல்வதனை நாளை மறந்து விடுவார்கள்.
அதிகாரத்திற்கு வரும் முன் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் மறந்து விடுவார்கள்.
இதுதான் எங்களது நாட்டின் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பிரதான நோயாகும்.
தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு சேவையாற்றுவதாக பிரச்சாரம் செய்வார்கள்.
எனினும் வெற்றியீட்டியதன் பின்னர் இருபத்து நான்கு மணித்தியாலமும் தனது குடும்பத்தை வலுப்படுத்திக் கொள்ளவே முயற்சிப்பார்கள்.
அவ்வாறான அரசியல்வாதிகளை கடல் அலையில் மாட்டிக்கொண்ட தவளை போன்று மிதக்க விட வேண்டுமென புத்திக்க பத்திரண அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் ஊடாக புலிகளின் மனங்களே காயப்படும்!- விமல் வீரவன்ச
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 01:29.21 AM GMT ]
போர் வெற்றிக் கொண்டாட்டங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனங்களே காயப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் போர் வெற்றி கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
இன்று அரசாங்க ஊடகங்கள் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என செய்தி வெளியிடுகின்றன.
இவ்வாறு கொண்டாடுவதனால் ஒரு தரப்பின் மனங்கள் காயப்படும் என குறிப்பிடுகின்றனர்.
யாருடைய மனங்களும் காயப்படாது,  தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயங்களே போர்வெற்றிக் கொண்டாட்டங்களினால் காயப்படும்.
பெரும்பான்மை தமிழ் மக்கள் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை விரும்புகின்றார்கள்.
போருக்கு சென்று இன்று கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் எங்களை சபிக்கின்றார்கள்.
முதுகெலும்பு இல்லாத தரப்புக்கள் இந்த அரசாங்கத்தை நடத்துகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இந்த அரசாங்கத்தை வழிநடத்துகின்றது.
ஒரேவிதமான எண்ணங்கள் உடையவர்கள் இன்று ஒன்றுகூடியுள்ளனர்.
உரிய முறையில் சிந்திக்கா விட்டால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது.
மைத்திரி யுகத்தின் நடவடிக்கைகளை மக்கள் கண்கூடாக பார்க்க முடிகின்றது.
அவ்வாறு தெரியாவிட்டால் அவர்கள் குருடர்களாகவே இருக்க வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஜெகத் டயஸின் நியமனம் குறித்து கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் மறுப்பு
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2015, 02:07.50 AM GMT ]
இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படை தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக் கூற ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக், நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்றபோது இந்த மறுப்பை வெளியிட்டார்.
இலங்கையின் இறுதிப்போரின் போது போர்க்குற்றம் புரிந்தவர்களில் ஜெகத் டயஸிம் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அவரை உயர்பதவிக்கு இலங்கை அரசாங்கம் நியமித்தமை குறித்து செய்தியாளர்கள் பர்ஹான் ஹக்கிடம் கேள்வி எழுப்பினர்.
எனினும் முதலில், மனித உரிமைகள் சபை இந்தவிடயத்தை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மாத்திரம் ஹக் பதிலளித்தார்.
ஏற்கனவே மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜெகத் டயஸின் நியமனத்தை கண்டித்திருந்தது
இந்த நியமனத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் நல்லணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyFSdSUhr6H.html

Geen opmerkingen:

Een reactie posten