இலங்கை தேசத்திலிருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரான்ஸ் மொழி திரைப்படும் அந்நாட்டின் உயரிய விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
‘தீபன்’(Dheepan) என பெயரிடப்பட்ட அந்த படத்தை பிரான்ஸ் நாட்டின் பிரபல இயக்குனரான Jacques Audiard என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக இலங்கை தமிழரான Jesuthasan Antonythasan என்பவரும், கதாநாயகியாக இந்திய தமிழரான Kalieaswari Srinivasan என்பவரும் நடித்துள்ளனர்.
இலங்கை தேசத்தின் உள்நாட்டு யுத்ததால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு (குறிப்பாக இந்த படத்தில் பிரான்ஸ்) செல்லும் ஈழத்தமிர்களின் வாழ்க்கையையும் அவர்கள் படும் துன்பத்தையும் இந்த படம் தத்ரூபமாக எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த படத்தில் தீபனாக வரும் கதாநாயகன், விடுதலை புலிகளின் இயக்கத்தில் இணைந்து தனி தமிழீழத்திற்காக போராடுகிறார்.
இந்த போராட்டத்தில் பல துன்பங்களை சந்தித்த அவர், பின்னர் தனது தாய் தேசத்தை விடுத்து போலியான கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகருக்கு வருகிறார்.
அவருடன் ஒரு பெண், ஒரு குழந்தையும் வருகிறார்கள். ஆனால், இவர்கள் மூவருக்கும் உறவு இல்லை என்றாலும், தங்களை கணவன் மனைவியாகவும், அந்த குழந்தையை தங்களது குழந்தை எனக்கூறி பாரீஸ் நகரில் தங்குகின்றனர்.
ஆனால், அந்நிய தேசத்தில் அகதிகள் குடியேறும்போது அவர்கள் படும் துன்பத்தையும் போராட்டத்தையும் இந்த படம் உணர்வு பூர்வமாக வெளிகொண்டு வந்துள்ளது.
அந்நிய தேசத்தின் புறக்கணிப்பால் தீபன் சமுதாயத்திற்கு எதிராகவும், அந்த பெண் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாகவும் மாறுவது போன்று இந்த படத்தின் கதை நகர்கிறது.
சுமார் 109 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 68வது கென்னெஸ் திரைப்பட விழாவில் ‘தீபன்’ திரைப்படமும் திரையிடப்பட்டது.
இப்படத்தில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, போரின்போது அவர்களின் போராட்டம் மற்றும் அந்த போர்க்கொடுமைகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வெளிநாடுகளுக்கு சென்று அங்கும் பல துன்பங்களை அனுபவிக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதை பிற இயக்குனர்கள், விமர்சகர்கள் மற்றும் தெரிவு குழு உறுப்பினர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
அது மட்டுமில்லாமல், நேற்று நடந்த இறுதி திரைப்பட விழாவில் போட்டியிட்ட 19 திரைப்படங்களை பின்னால் தள்ளி ‘தீபன்’ திரைப்படம், பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘’Palme d'Or’’ என்ற விருதையும் பல பரிசுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.
உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி பிரான்ஸ் நாட்டில் வெளியாக உள்ளது.
பிரித்தானியாவின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்க கூடாது: பிரதமர் கேமரூன் அதிரடி அறிவிப்பு |
[ திங்கட்கிழமை, 25 மே 2015, 06:20.51 மு.ப GMT ] |
ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாட்டினர்களை சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து பிரித்தானியா நாடு வெளியேறுவது தொடர்பான விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் சிலர், வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் குடியேறியுள்ள பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் அலுவலகமான Downing Street நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், பிரித்தானியாவில் குடியேறியுள்ள சுமார் 1.5 மில்லியன் ஐரோப்பிய மக்கள் வாக்களிக்க அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள செய்தியில், பிரித்தானியாவின் எதிர்காலத்தை வெளிநாட்டு அகதிகள் தீர்மானிக்க கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் பட்டியலிலிருந்து பிரித்தானியா வெளியேறினால், அது அகதிகளின் வாழ்க்கை முறையை பாதிக்கும் என்பதால், அவர்கள் ஐக்கிய நாடுகளுடன் பிரித்தானியா இணைந்திருப்பதையே விரும்புவார்கள்.
இதனால், அவர்களின் வாக்கெடுப்பும் ஐக்கிய நாடுகளுக்கு ஆதரவாகவே இருக்கும்.
பிரித்தானியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க பிரித்தானிய நாட்டு குடிமக்களுக்கு தான் உரிமை உள்ளது என கூறிய எதிர்க்கட்சியினர் பிரதமரின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
மேலும், பிரித்தானிய குடிமக்களில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஐக்கிய நாடுகளின் சபையிலிருந்து பிரிவது தொடர்பான விரிவான தகவல் எதிர்வரும் புதன்கிழமை அன்று ராணி இரண்டாம் எலிசபெத் அளிக்கவுள்ள உரையில் இடம்பெறும் என பிரித்தானிய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://world.lankasri.com/view.php?22eMM303lOe4e2BnBcb280Mdd208Ybc3nBTe43Oln022gAA3
|
|
Geen opmerkingen:
Een reactie posten