[ ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2015, 02:54.24 AM GMT ]
ஆணைக்குழுவின் கடமைகள் தொடர்பிலேயே கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று, டெஸ்மன் டி சில்வாவை சந்தித்ததாக குறிப்பிட்ட அவர், இச்சந்திப்பின் போது ஆணைக்குழுவின் இரண்டாம் கால நீடிப்புக்கடமைகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை இரண்டாம் கால நீடிப்புக்கடமை காலத்தில் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வினை பெற ஐரோப்பாவின் அனுபவங்களை இலங்கை பின்பற்றுமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2015, 03:08.04 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் முரண்பட்ட விடயங்கள் தொடர்பில் பணியாற்றக்கூடிய வகையில் பொறிமுறை ஒன்று தயாரிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பில் குறைவான முன்னெடுப்புக்களே மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கில் இராணுவமயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் எண்ணுகின்றனர். இந்தநிலையில் வடக்கில் இருந்து முழுமையாக இராணுவத்தை அகற்ற முடியும் என்று எவரும் எதிர்ப்பார்க்க முடியாது. எனினும் முரண்பாடான விடயங்கள், ஐக்கிய இலங்கைக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இதற்காக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட அமைப்புக்கள் தமது அனுபவங்களை கொண்டு இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாகவும் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
நடைமுறை அரசாங்கம் தென்னாபிரிக்காவின் அனுவங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது வரவேற்க்கத்தக்கது. அது ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.
ஐரோப்யாவின் அனுபவங்களை இலங்கை பின்பற்றலாம் என்று கூறுவது வெறுமனே சுயநலம் கருதிய கருத்து அல்ல. ஐரோப்பாவில் ஏற்கனவே நல்லிணக்க விடயத்தில் சிறந்த அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன.
வடஅயர்லாந்தின் சமாதான நடவடிக்கைகள், போல்கன் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளை கூறலாம்.
எனினும் இலங்கையின் விடயத்தை பொறுத்தவரையில் அது இலங்கைக்குள்ளேயே தீர்க்கப்படவேண்டும் என்று டேவிட் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFSUSUiv1D.html
Geen opmerkingen:
Een reactie posten