தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 mei 2015

இலங்கையின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு சுவிட்ஸர்லாந்து ஆதரவு

19வது திருத்தம் உட்பட்ட இலங்கை அரசாங்கத்தின் மீளமைப்பு திட்டங்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற மாநாட்டின் போது சுவிட்ஸர்லாந்தின் தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடர்கூர்ன் (Heinz Walker Nederkoon)  இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகத்தின் தன்மைகள் தென்பட்டதாகவும் அவ்வாறு ஜனநாயக முறையில் நடைபெற்றது என்னை மிகவும் கவர்ந்துள்ளது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 19வது சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தமை இங்கு  சீர்திருத்தம் மேற்கொள்ளவுள்ள அரசின் மனநிலையை காட்டுகிறது . இது ஒரு நல்ல தொடக்கம் . இந்த முடிவுக்கு  சுவிட்ஸர்லாந்து முழுமையாக ஆதரவு தரும்.  என கூறியுள்ளார் . 
மேலும் இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியின் கீழ்   குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையானது இலங்கையில் மீளமைப்புக்கள் செயற்படுவதை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த முனைப்புக்களுக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten