தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 mei 2015

பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!

பாதுகாப்பு அதிகாரியின் கைது தமக்கு எதிரான மற்றுமொரு அத்தியாயம்!- மஹிந்த ராஜபக்ச
[ புதன்கிழமை, 06 மே 2015, 12:51.50 AM GMT ]
தமது பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ வீரர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, தமக்கு மற்றும் தமது குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டின் மற்றுமொரு அத்தியாயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராணுவ கோப்ரல் சேனககுமார என்பவரே மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமது கோரிக்கையின்படி மகன் நாமல் ராஜபக்ச நடத்திய கூட்டம் ஒன்றின்போது பாதுகாப்புக்காக குறித்த இராணுவவீரர் சென்றிருந்தார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கூட்டம் இடம்பெற்றமையால், நாமல் ராஜபக்ச அதிதிகளுக்கான வழியில் செல்ல அனுமதிக்கப்படாமல் பொதுமக்கள் செல்லும் வழியிலேயே அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அம்பாந்தோட்டை கேட்போர் கூட வாசலில், நாமல் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக குறித்த இராணுவ வீரர் நின்றிருந்தார்.
இதன்போது அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு கைதுசெய்யப்பட்;டுள்ளார் என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!
[ புதன்கிழமை, 06 மே 2015, 12:59.42 AM GMT ]
பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கன்சர்வேட்டிவ், லிபரல், லிபரல் ஸ்தோத்ரயன் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குதல், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை தேர்தல் பிரகடனங்களில் சில வேட்பாளர்கள் உள்ளடக்கியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான புலம்பெயர் தமிழர்கள் ஆறு பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 84 வேட்பாளர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வேட்பாளர்களில் பலர் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது குறித்த யோசனையையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக புலம்பெயர் புலி ஆதரவு தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyFTaSUis1B.html

Geen opmerkingen:

Een reactie posten