தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 mei 2015

இன்னும் 10 நாட்களில் பாராளுமன்றம் வரும் 20ம் திருத்தம்

19ற்கு இவ்வாரம்தான் கையெழுத்திடுவாராம் சமல்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2015, 04:07.25 AM GMT ]
19ம் திருத்தச்சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இவ்வாரம் கையொப்பமிடுவார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சட்ட வல்லுனர்களால் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில் பின்னர் அது நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து நீதிவானின் அங்கீகாரத்தின் பின்னர் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கிய பின்னர் சட்டமன்ற சபையை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 நாட்களில் பாராளுமன்றம் வரும் 20ம் திருத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2015, 04:38.56 AM GMT ]
புதிய தேர்தல் முறை உள்ளடக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை எதிர்வரும் 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறை தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சி தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் அத்தீர்மானம் எதிர்வரும் 13ம் திகதி அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொண்டு அன்றைய தினமே வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதோடு 19ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten