[ செவ்வாய்க்கிழமை, 12 மே 2015, 04:31.52 PM GMT ]
ஏனெனில் எம்மைவிட மேலான சக்தி ஒன்று உண்டு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
அந்த நிலையில் ஈழத்துச் சனம் கொத்தக்கொத்தாக அழிக்கப்பட்ட போதும் இடம் பெயர்ந்து தெருத்தெருவாய் அலைந்த போதும், குற்றுயிரும் குலைஉயிருமாய் கிடந்த வேளையும் தமிழன் கையேந்தாத கடவுளே இல்லை.
ஆனால் தமிழனை எந்த கடவுளும் ஏனென்றும் கேட்கவில்லை. மாறாக தமிழன் தஞ்சம் புகுந்த ஆலயங்கள் மீதும், பள்ளிக்கூடங்கள் மீதும் குண்டுகள் கொட்டித் தீர்க்கப்பட்டன. காப்பாற்றும் என்றிருந்த கடவுளர்களையே காப்பாற்ற யாருமில்லை என்கின்ற நிலையே வடக்கு கிழக்கு தமிழனுக்கும், கடவுளுக்கும் உண்டாயிற்று.
ஆனால் பேரினவாத சிந்தனையோடு செயற்பட்ட இலங்கையின் பெரும்பான்மை தரப்பு எகத்தாள போக்கில் இருந்தது. தமிழனை சுட்டு வீழ்த்த பௌத்த பிக்குகளிடம் பிதிர்த் ஓதி நூல் கட்டி வழியனுப்பி வைத்தது, பௌத்த தேசம்.
இதை மகிந்த ராஜப்க்ஷ அன்று முற்றுமுழுதாக செய்தார். போரில் வெற்றி பெற்றதும் மண்ணையும் விழுந்து வணங்கினார். அப்பொழுது எல்லாம் அவருக்கு அதிகம் கடவுள் ஞாபகம் வந்திருக்க வாய்ப்பிருக்காது.
ஆனால் தமிழன் எப்படி தன் நிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், வேதனையாலும், துன்பத்தாலும் துவண்டு கையெடுத்து கும்பிட்டும் எந்த நீதியும் கிடைக்காமல், இறுதியில் கடற்கரையோரமாக அநாதையாக செத்துப்போனானோ அதை எல்லாம் இன்று நினைக்கும் பொழுது நமது பாதி இரவுகள் உறக்கமின்றியே கழிகின்றன.
இது, வெற்றியை பெற்று இருக்கும் பொழுது நிதானமாய், பொறுப்போடும், பணிவோடும் இருந்திருக்க வேண்டும். அப்படி யாராக இருந்திருந்தாலும் அவர்களுக்கு கொஞ்ச இன்பமேனும் பிற்காலத்தில் கிடைக்கும்.
ஆனால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அப்படி நடந்துகொள்ளவில்லை.
வெற்றிகளைக் கண்டதும் துள்ளிக்குதித்தார். தன்னை விட்டால் யாருமில்லை என்று திமிர் கொண்டார். தலைக்கணம் உச்சத்தை தொட தன்னை வளர்த்து விட்ட சந்திரிக்காவையே பதவிகளில் இருந்து தூக்கியெறிந்து இறுதியாக நாட்டை விட்டே வெளியேற்றினார்.
சந்திரிக்கா மட்டுமா? இன்னும் எத்தனையோ பேர், இருந்த இடமே தெரியாமல் ஆக்கப்பட்டார்கள், அழிக்கப்பட்டார்கள். அப்பொழுது எல்லாம் கடவுள் என்கின்ற பரம்பொருள் உண்டு என்று கிஞ்சித்தும் நினைத்திருக்க மாட்டார் சீமான்.
இத்தனை நிட்டூரங்களையும் செய்து ருத்திர தாண்டவம் ஆடிய அதே மகிந்த இன்று பதவியிழந்து, தன் மானம் இழந்து, சொத்துக்களையும் இழக்கின்ற நிலை வரும் பொழுது தான் இவை யாவற்றையும் கடவுள் ஒருவன் மேலே இருந்து பார்த்துக்கொள்கின்றான் என்கின்றார்.
இவரது கடவுள் யார் என்கின்ற சந்தேகமே இப்பொழுது மேல் எழுகின்றது. எதுவாயினும் ஆட்டம் போடும் பொழுது தெரியாத சலங்கை ஒலியின் ஓசை இப்பொழுது தான் இவருக்கு தெரியவந்திருக்கின்றதோ என்னமோ?
பலரின் துன்பக்கண்ணீரை பார்த்துக்கொண்டிருந்த கடவுள் தான் இப்பொழுது மகிந்தவை முறையாக கவனித்துக்கொள்(ல்)கின்றதோ என்னமோ யார் அறிவார்.
பெருக்கத்தில் வேண்டும் பணிவு சிறிய
சுருக்கத்தில் வேண்டும் உயர்வு
சுருக்கத்தில் வேண்டும் உயர்வு
என்கின்ற வள்ளுவனின் வேத வாக்கினை ஏற்றுக்கொண்டு அதன் வழி செயற்பட்டிருப்பாராயின் இந்த நிலை சற்று குறைந்திருக்கும்.
இன்னும் என்னென்னமோ யாருக்கு தெரியும். அந்த கடவுள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானேன்! பிரித்தானியாவில் கதறிய இலங்கை பெண்!
[ செவ்வாய்க்கிழமை, 12 மே 2015, 05:21.32 PM GMT ]
ஈஸ்டன் டெய்லி பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் பிரித்தானியாவின் உள்துறை அலுலகம் தம்மை இலங்கைக்கு திருப்பியனுப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண் அண்மையில் இங்கிலாந்தின் கரையோர நகரான குரோமருக்கு வந்து தமது கணவருடன் இணைந்தார். இந்தநிலையில் அவர் புகலிடக்கோரிக்கையை விடுத்தபோதும் அது நிராகரிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்படவுள்ளார்.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை பேர்மிங்கம்மில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் ஒன்று விசாரணை செய்து வருகிறது.
இதில் சாட்சியமளித்த பெண்ணின் கணவர் தாம் இராணுவத்தினரிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு தப்பிவந்தபோது அவர்களால் தம்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்த உள்துறை அலுவலக அதிகாரி ஜோன் ஸ்மித் குறித்த பெண் தமது கணவர் தொடர்பில் வழங்கிய வங்கி விடயம் மற்றும் தொழில் என்பனவற்றை நம்பமுடியாமை காரணமாகவே அவரை திருப்பியனுப்ப முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த பெண் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டியேற்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதி தமது தீர்மானத்தை ஒரு தினத்தில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyFSWSUix2H.html
Geen opmerkingen:
Een reactie posten