தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 16 mei 2015

கடலில் மூழ்கிய 750 அகதிகள்....... (படம் இணைப்பு)


நடுக்கடலில் தத்தளித்த சமயம் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட 750 இற்கு மேற்பட்ட அகதிகள் இந்தோனேஷியாவை அடைந்துள்ளார்கள்.

பயணித்த வள்ளங்கள் ஆச்சே மாநிலத்தின் கரைக்கு அப்பாலுள்ள கடலில் மூழ்கியிருந்தன. அவர்களை இந்தோனேஷிய மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்ததாக பொலிசார் அறிவித்துள்ளார்கள்.

மலேசிய கடற்பரப்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட படகுகள், இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் மூழ்கியதாகத் தெரிகிறது. சுமார் 712 பேர் பயணித்த படகொன்று கடலில் மூழ்கிய விதத்தை அகதிகள் விபரித்துள்ளார்கள்.

இந்தோனேஷிய பொலிஸ் மேலதிகாரியொருவர் தகவல் தருகையில், இவர்களை மலேசிய கடற்படை இந்தோனேஷிய கடற்பரப்பிற்குள் விரட்டியடித்ததை பூர்வாங்கத் தகவல்கள் ஊர்ஜிதம் செய்வதாகத் தெரிவித்தார்.

அகதிப் படகுகளில் பங்களாதேஷை சேர்ந்தவர்களும், ரொஹிஞ்ஜிய அகதிகளும் இருந்திருக்கிறார்கள். இதற்கு முன்னர், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல படகுகளை விரட்டியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
16 May 2015

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1431798816&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten