[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 12:26.31 PM GMT ]
இந்த சபைகள் வரும் 15.5.2015 கலைக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் மலையகப் பகுதிகளில் குறிப்பாக நூரளை, தலவாக்கலை, ஹற்றன் போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக செறிந்து வாழ்கின்ற படியால் இவர்களின் பிரதிநிதித்துவம் மாநகர சபை, நகர சபை போன்றவைகளில் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் சக்தி அதிகமாக உள்ளது.
இதனால் இந்த சபைகளை நடாத்துவதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மிகமிக அவசியமாகின்றது.
குறிப்பாக மலையக மக்கள் 65 வீதம் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் மாநகர சபையில் இன்று ஆறு உறுப்பினர்கள் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளாவர்.
மிகுதி நான்கு உறுப்பினர்களே பெரும்பான்மை இனத்தவர்கள். எனினும் மாநகர சபை முதல்வர் பெரும்பான்மை இனத்தவராக இருக்கின்ற போதும், இவர் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் சிறுபான்மை இன பிரதிநிதிகளின் உதவியின் மூலமே அமுலாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்.
இந்த நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும்போது தமிழ் பிரதிநிதிகள் அல்லது சிறுபான்மை பிரதிநிதிகளை முற்றாக இல்லாது ஒழிக்கும் திட்டத்தை நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை இன அரசியல் பிரதிநிதி மிக கச்சிதமாக, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த பிரதிநிதியும் தெரிவு செய்ய முடியாதவாறு எல்லை மீள் திருத்தத்தை அமுலாக்க சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளார்.
இது சம்பந்தமான கலந்துரையாடல்களையும் சகல சிறுபான்மை இன அரசியல் பிரதிநிதிகளிடம் தற்பொழுது நடாத்தப்பட்டு அதில் மிக கவனமாக அவர்களின் அனுமதியை பெறும் அதிர்ச்சி திட்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் நாம் குறிப்பிட்ட மாநகர சபை, நகர சபைகளில் சிறுபான்மை மக்கள் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் குறிப்பாக தோட்ட மக்கள் அனைவரையும் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச எல்லைக்குள் மாற்றப்பட்டு பெரும்பான்மை மக்கள் கொண்ட சபையாக மாநகர சபை நகர சபைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நுவரெலியா மாநகர சபையை தனி பெரும்பான்மை சிங்கள பிரதிநிதிகள் சபையாக மாற்றியுள்ள நிலை வரும் தேர்தலில் உருவாகியுள்ளது.
தமிழ் தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை நீக்கி அதற்கு பதிலாக சிங்கள மக்கள் வாழ்ந்த பிரதேச சபை பகுதியை சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் பிரதேச சபைக்குள்ளேயே அடக்கும் திட்டமும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
எனினும் பிரதேச பகுதியில் வாழும் சிங்கள மக்களை ஒதுக்காது அவர்கள் வாழும் அந்த பிரதேச சபைக்குள் அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் தெரிவு செய்ய கூடிய வழிவகையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவருகின்றது.
இந்த இரகசிய திட்டத்தை வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் நடைமுறைபடுத்த சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் கடைசி நேரத்தில் இந்த விடயத்தை அறிந்த இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னண், முன்னாள் பிரதிநிதி அமைச்சர் புத்திரசிகாமணி அவர்கள் இன்று நூரளை மாவட்ட செயலாளரிடம் நேரடியாக சென்று விபரங்களை பெற்றதோடு, நூரளை மாவட்ட செயலாளரிடம் சகல விபரங்கள் அடக்கிய ஆவணங்களை பெற்றுக் கொண்டார்கள்.
மேலதிக நடவடிக்கை எடுத்து இந்த அரசியல் இனவாதியின் திட்டத்தை தகர்க்க இந்த விடயம் தொடர்பாக உடன் பேச்சுவார்த்தையை வரும் 9ஆம்திகதி நடாத்தும் படி மாவட்ட செயலாளரிடம் கோரியுள்ளனர்.
இந்த திட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் காலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும் தற்பொழுது தெரிய வந்துள்ளது.
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் திட்டம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்துள்ளது என்பதேற்கு இது ஒரு உதாரணம்.
எனவே மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக உள்ள இந்த நுவரெலியா மாவட்ட உறுப்பினர்கள் எவ்வாறு இந்த திட்டத்தை தகர்க்க போகின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
தன் கையை வைத்தே தனது கண்களை குத்திக்கொள்ளும் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு திறமையாக செயல்படுத்தியுள்ள முன்னைய அரசும் அதற்கு துணைப் போன சிறுபான்மை தலைமைகளும் சிந்தித்து இதற்கு நல்ல முடிவை செய்யவேண்டும்.
இந்த திட்டம் நுவரெலியா மாநகர சபைக்கும் மடடும் இல்லாது தலவாக்கலை மற்றும் ஹற்றன் நகர சபைக்கும் சாத்தியமாகலாம் என்பது நிச்சயம்.
ஆகவே சிறுபான்மை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எவ்வாறு வாக்களித்தார்களோ அந்த பகுதியில் அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் வரும் காலத்தில் மாநகர மற்றும் நகர சபைகளில் தமிழ் பிரதிநித்துவம் அழிக்கப்பட்டுவிடும் இதை அரசியல் தலைமைகள் தடுத்து நிறுத்தாவிட்டால் இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகலாம்.
மகா
சட்டத்தை நிறைவேற்றியும் நடைமுறைப்படுத்தாத மைத்திரி அரசு
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 12:32.34 PM GMT ]
தேசிய ஒளடத கொள்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் கடந்துள்ளன.
எனினும் இது தொடர்பிலான சட்ட விதிகள் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பிலான சட்டம் மார்ச் மாதம் 6ம் திகதி நிறைவேற்றப்பட்டது.
எனினும் அந்த சட்டம் நிறைவேற்றபட்டாலும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழில் பிரபல பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை!
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 12:59.12 PM GMT ]
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கின்றார்.
இதன்போது அவர் குறிப்பிடுகையில்,
பிரபல்யமான பாடசாலைகளுக்கு முன்பாக இரு வேளைகளில் அதாவது பாடசாலை ஆரம்பிக்கும்போதும், பாடசாலை விடும்போதும், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களில் வரும் நபர்கள் போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள்.
ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வாகனங்களில் வருவதுடன், அவர்கள் இந்தப் பகுதியை சேராதவர்களாகவும் உள்ளார்கள். இது தொடர்பாக நாங்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தும் எவ்விதமான, நடவடிக்கைகளும் இல்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பேசிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க,
சபையிலிருந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பார்த்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி திணறிய நிலையில், மேற்படி விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால். பொருத்தமான வேறு பொறுப்பதிகாரி நியமிக்கப்படுவார் என எச்சரித்துள்ளார்.
யாழில் போலி பல் சிகிச்சை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
யாழ்.நகர் பகுதியில் போலி பல் சிகிச்சை நிலையங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கொடுக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை இல்லை என பல் சிகிச்சை வைத்தியர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க கூறியுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே மேற்படி விடயம் தொடர்பாக வைத்தியர்கள் குற்றம் சுமத்தியி ருக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்.போதனா வைத்தியசா லைக்கு முன்பாக பல் சிகிச்சை மருத்துவ உதவியாளர்களால், பல் சிகிச்சை நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இவர்கள் அவ்வாறான சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்த முடியாது என மருத்துவ சட்டம் கூறுகின்றது.
ஆனால் இவர்கள் சத்திரசிகிச்சைகளையும் கூட நடத்துகின்றார்கள். மேலும் தரகர்கள் ஊடாக சிகிச்சைக்கு 25ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வரையில் பணமும் அறவிடப்படுகின்றது.
இந்நிலையில் விடயம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் நடவடிக்கை இல்லை. என மருத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து சபையில் இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்து என்ன நடந்தது? எதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினர்.
இதன்போது அந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதாக பொறுப்பதிகாரி பதிலளித்தார். இதனையடுத்து மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜயசிங்க சுமுகமாக தீர்க்கப்பட்டதா? என கேட்டபோது அவ்வாறு தீர்க்கப்படவில்லை.
பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. என அ வர் கூறியதையடுத்து பொறுப்பதிகாரியை பார்த்து பொய் சொல்லவேண்டாம். என திட்டிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வைத்தியர்களின் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறும், இரு தினங்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFTZSUiszC.html
Geen opmerkingen:
Een reactie posten