இலங்கை அரசாங்கம் 13வது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தமிழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அவர்களுக்கு சமவுரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கோரியுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக பிரிவினர் இலங்கையில் விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று நாடு திரும்பியவுடன் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் இல கணேசன் தலைமையிலான குழுவே இலங்கைக்கு வந்திருந்தது.
இந்தக்குழு இலங்கையின் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.
இந்தநிலையில் போரினால் கணவர்மாரை இழந்த 80ஆயிரம் தமிழ் பெண்களுக்கு நலத்திட்டங்களை தமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இலங்கையின் அமைச்சர்கள் தெரிவித்தாக இல கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyFTcSUiu2G.html
Geen opmerkingen:
Een reactie posten