தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 18 mei 2015

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை தானும் அனுபவித்து தன் மகனை மண்ணுக்காய் விதைத்தவர்....!



முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட சோக வரலாறு: வடமாகாண முதல்வர்
[ திங்கட்கிழமை, 18 மே 2015, 06:24.50 PM GMT ]
முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட சோக வரலாற்று பதிவு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் இன்று காலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார்.
உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் ஒருமித்த களங்கத்தை ஏற்படுத்திய நிகழ்வே முள்ளிவாய்க்கால் பேரவலம்.
மனித உரிமைகள் மறக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyFScSUhr4G.html


முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை தானும் அனுபவித்து தன் மகனை மண்ணுக்காய் விதைத்தவர்....!
[ திங்கட்கிழமை, 18 மே 2015, 09:03.27 PM GMT ]
துட்டகைமுனு என்னும் சிங்கள மன்னன் தமிழ் அரசனாகிய எல்லாளனோடு போர் செய்தாலும், அவன் தன்னோடு போர் புரிந்த அந்த தமிழ் மன்னனின் வீரத்தை மதித்து அவரின் சிலைக்கு முன்னால் செல்வபர்கள் மரியாதை செலுத்த வேண்டும் ..
என கட்டளையிட்டிருந்தான். அந்த மரபில் வந்தவர்கள் முள்ளிவாய்க்காலையும் மதிக்க வேண்டுமென வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின் போதே அவர் லங்கா சிறி வானொலிக்கு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyFScSUhr4J.html

Geen opmerkingen:

Een reactie posten