தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 mei 2015

சுவிஸ் நாட்டில் நள்ளிரவில் துப்பாக்கி சூடு: கொத்து கொத்தாக சாலையில் கிடந்த சடலங்கள் !

சுவிட்சர்லாந்து நாட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பல குடியிருப்புவாசிகள் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Aargau மண்டலத்திற்கு உட்பட்ட Würenlingen நகர் குடியிருப்பு பகுதியில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில், Langackerweg பகுதியில் திடீரென துப்பாக்கி சுத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் உடனே Aargau மண்டல பொலிசாருக்கு அவசர தகவல் அனுப்பினர்.
தகவல் கிடைத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு வீடுகளின் முன்பு பல பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக அவசர மருத்துவ வாகனத்தை வரவழைத்து சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூட்டில் இறந்தவரகள் அனைவரும் இளைஞர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புவாசிகளிடம் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் துப்பாக்கி சத்தம் தான் கேட்டது என்றும், ஆட்கள் யாரையும் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.
Aargau மண்டலத்தில் நடந்துள்ள இந்த துப்பாக்கி சூடு மிக மோசமானதாக உள்ளதாகவும், இச்சம்வத்தை நிகழ்த்தியது யார், என்ன காரணம் உள்ளிட்ட எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கையை பொலிசார் வெளியிட மறுத்துள்ளதுடன், இச்சம்பத்தை நிகழ்த்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten