தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 mei 2015

இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களையும் பீஜேபி அரசு பாதுகாக்கவேண்டும்!- இல. கணேசனிடம் மனோ கணேசன்

மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா!
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 06:51.45 AM GMT ]
மகிந்தவிற்கும் ,மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நடைபெறவுள்ள  சந்திப்பை நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பின் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டிற்கு அனுப்புவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததனால் ஐக்கிய தேசிய கட்சியினர் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நியமித்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு உதவி செய்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை: கம்மன்பில
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 07:00.21 AM GMT ]
ஜனாதிபதியினால் உள்ளூராட்சி சபைகளை கலைக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சரினால் இதனை கலைப்பதற்கு அதிகாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி சபை சட்டத்தின் 154ம் சரத்தில்  இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கு பொறுப்பான மாகாண அமைச்சரினாலேயே உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகள் மாகாணசபைகளுக்கு சொந்தமானவை எனவும், மாகாணசபையின் அமைச்சரினால் இது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,
மேல் மாகாணசபையின் முதலமைச்சரே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு முதன் முதலாக அறிவித்திருந்தார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

பெயருக்காக வாழும் தலைவன் அல்ல நான்: மகிந்த சூளுரை
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 07:28.57 AM GMT ]
நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்படும் தலைவர் கோபம், வைராக்கியத்துடன் செயற்பட கூடாதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேச விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டின் எதிர்கால சந்ததிகளுக்கு நன்மையான வழிகளை கற்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பௌர்ணமி தினத்திலும் சிலர் விகாரைக்கு செல்வதில்லை.
புனித ஸ்தலங்களுக்கு நாங்களே செல்வதில்லை என்றால் நமது பிள்ளைகளும் செல்லமாட்டார்கள்.
இந்நிலையினை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நம் நாட்டின் அபிவிருத்தி திடீரென வீழ்ச்சியை கண்டுள்ளது.
இதற்கான மாற்று வழியையும் நாம் யோசிக்க வேண்டும்.
இதேவேளை மகிந்தோதய என்ற பெயர் பலகையை அகற்றிவிட்டால் மாத்திரம் பொது மக்கள் மனதில் இருந்து மகிந்த என்ற எனது பெயரை அழித்துவிட முடியாது.
நான் பெயருக்காக மாத்திரம் செயற்படுபவன் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெயருக்காக வாழும் தலைவன் அல்ல நான்: மகிந்த சூளுரை
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 07:28.57 AM GMT ]
நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்படும் தலைவர் கோபம், வைராக்கியத்துடன் செயற்பட கூடாதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெலியத்த பிரதேச விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டின் எதிர்கால சந்ததிகளுக்கு நன்மையான வழிகளை கற்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பௌர்ணமி தினத்திலும் சிலர் விகாரைக்கு செல்வதில்லை.
புனித ஸ்தலங்களுக்கு நாங்களே செல்வதில்லை என்றால் நமது பிள்ளைகளும் செல்லமாட்டார்கள்.
இந்நிலையினை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நம் நாட்டின் அபிவிருத்தி திடீரென வீழ்ச்சியை கண்டுள்ளது.
இதற்கான மாற்று வழியையும் நாம் யோசிக்க வேண்டும்.
இதேவேளை மகிந்தோதய என்ற பெயர் பலகையை அகற்றிவிட்டால் மாத்திரம் பொது மக்கள் மனதில் இருந்து மகிந்த என்ற எனது பெயரை அழித்துவிட முடியாது.
நான் பெயருக்காக மாத்திரம் செயற்படுபவன் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பரில் புதிய அரசு மைத்திரி கெரியிடம் உறுதி
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 07:40.39 AM GMT ]
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரின் இவ்விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாராளுமன்றத்திற்கு அப்பால் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக உறுதியளித்திருந்தார்.

19ஆம் திருத்தச் சட்டத்தில் கையெழுத்திடாது வெளிநாடு சென்ற சபாநாயகர்
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 08:06.39 AM GMT ]
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட 19ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்னும் கையெழுத்திடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாள், சபாநாயகர் சமல் ராஜபக்ச  உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை  மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து , 19ஆம் திருத்த திட்டமூலத்தில்  கையெழுத்திடாமல் வெளிநாடு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், விரைவில் சபாநாயகர் 19ஆம் திருத்தச்சட்டத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களையும் பீஜேபி அரசு பாதுகாக்கவேண்டும்!- இல. கணேசனிடம் மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 09:26.46 AM GMT ]
இலங்கையில் வாழும் வாழும் 32 லட்சம் தமிழர்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும். இலங்கைத்தீவில், தமிழர்களுடன் 18லட்சம் முஸ்லிம்களும், 150லட்சம் சிங்களவர்களும், பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றார்கள்.
இலங்கையில் வடக்குக்கும், தெற்குக்கும், தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், வட-கிழக்கு, இந்திய வம்சாவளி, மலையக தமிழர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் நமது கட்சி எப்போதும் உறவு பாலமாக செயலாற்றுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் இல. கணேசனிடம் தெரிவித்தார்.
இன்று நண்பகல் இடம்பெற்ற சந்திப்பில் பாரதீய ஜனதா கட்சி சார்பாக இல. கணேசன் மற்றும் தமிழக துணைத்தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜமமு சார்பில் கட்சி தலைவர் மனோ கணேசன், உப செயலாளர் சண். குகவரதன், பிரசார செயலர் குருசாமி, ஊடக செயலர் பாஸ்கரா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இல. கணேசனுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது, .
கடந்த மன்மோகன் சிங் அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கை இந்திய தேசிய நலனுக்கும், இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனுக்கும், இலங்கை-இந்திய நீண்டகால நட்புறவு கோட்பாடுகளுக்கும் அப்பால் சென்று சில தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருகின்றது.
எனவே இன்று இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள அதேவேளையில், இந்தியாவிலும் புதிய அரசு ஆட்சியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
அதேவேளை இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியில், இலங்கை தொடர்பான நீங்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதும் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இது சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு அல்ல.
இது நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி அரசு என்ற செய்தியும், இரண்டு ஆட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடும் இன்று இலங்கையில் அனைத்து தரப்பினராலும் புரிந்துக்கொள்ளப்பட்ட விடயங்கள் என்பதை உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்றைய இலங்கை அரசு கடந்த கால மகிந்த அரசுடன் பிரதான இரண்டு அடிப்படைகளில் வேறுபடுகிறது. ஒன்று, கடந்தகால தமிழர் எதிர்ப்பு அரச பயங்கரவாத நிலைப்பாடு இன்று இல்லை. இரண்டாவது, அரசு மட்ட இந்திய எதிர்ப்பு இன்று இல்லை.
ஆகவே நாட்டில் மைத்திரி-ரணில் ஆட்சி தமிழர்களின் மத்தியில் கடந்த காலங்களை ஒப்பிடும் போது ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாம் அவசரகதியில் மாற்றங்களை திணித்து மீண்டும் மகிந்த தலையெடுக்க இடம்கொடுக்க விரும்பவில்லை.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் சொல்லொணா போர்க்கால துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களின் தேசிய அரசியல் அபிலாஷை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்க பாரத அரசு துணையிருக்க வேண்டும்.
அதேபோல் இலங்கையில் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே இருக்கின்ற ஐந்து பிரதான மாகாணங்களில் இந்நாட்டு தமிழர் ஜனத்தொகையில் சரிபாதியினர் வாழ்கின்றார்கள். குறிப்பாக மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களாக கல்வி, சுகாதார, வீடமைப்பு ஆகிய துறைகளில் பிற்படுத்தபட்ட பிரிவினராக தமிழர்கள் வாழ்கிறார்கள்.
அதேபோல் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களும், வடக்கு-கிழக்கில் இருந்து குடிபெயர்ந்தவர்களும், கடந்த காலங்களில் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் இருந்து நேரடியாக குடிபெயர்ந்தவர்களுமான தமிழர்கள் வந்து குடியேறி கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் நிலைகொண்டு வாழ்கிறார்கள்.
இத்தகைய அனைத்து தமிழர்களையும், பிரதமர் நரேந்திர மோடியின் பாரத ஜனதா அரசு கவனத்தில் எடுத்து பாதுகாக்க வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyFTZSUir7J.html

Geen opmerkingen:

Een reactie posten