தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 mei 2015

இலங்கைப் படையினர் எந்தவொரு காரியத்தையும் திறம்பட செய்யக் கூடிய ஆற்றலுடையவர்கள்!- இராணுவத் தளபதி

இலங்கை, ரஷ்யா: புதிய உடன்படிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 12 மே 2015, 10:40.20 AM GMT ]
இலங்கையும், ரஷ்யாவும் புதிய உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரஷ்யதூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்ளும் வகையிலேயே இவ் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
அனைத்துலக போக்கின் முன்னேற்றங்கள் எவ்வாறு காணப்பட்ட போதிலும், இலங்கையும் ரஷ்யாவும் தமது நட்புறவு மற்றும் நெருக்கத்தையும் தொடர்ந்தும் பேண வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின் போது, பாதுகாப்பு, சக்தி, வர்த்தகம், விவசாயம், கல்வி, நீதித்துறைகளில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும், உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளைக் கையெழுத்திட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது இலங்கை ஆராய்ச்சியாளர்கள் மூவரை ரஷ்யாவில் அணுசக்தி மற்றும் பௌதீகவியல் துறையில் கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் வழங்கவும் ரஷ்யா முன்வந்துள்ளது.
அத்துடன், ரஷ்யா வழங்கிய கடன் திட்டத்தில்,இலங்கை விமானப்படைக்கான கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டதை தவிர்த்து எஞ்சியுள்ள 100 மில்லியன் டொலரையும், இலங்கை பயன்படுத்திக் கொள்ள முடியும் என ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் படையினர் எந்தவொரு காரியத்தையும் திறம்பட செய்யக் கூடிய ஆற்றலுடையவர்கள்!- இராணுவத் தளபதி
[ செவ்வாய்க்கிழமை, 12 மே 2015, 10:53.05 AM GMT ]
இலங்கையின் முப்படையினர் எந்தவொரு காரியத்தையும் திறம்பட செய்யக் கூடிய ஆற்றல்களைக் கொண்டவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்த களத்தில் போன்றே ஏனைய பணிகளையும் சிறந்த முறையில் ஆற்றக்கூடிய திறமையுடையவர்கள் எங்களது முப்படையினர்.
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக இலங்கையின் முப்படையினரும் வைத்தியர்கள் குழுவொன்றும் நேபாளம் சென்றிருந்தது.
நாடு திரும்பிய இந்த முப்படையின் பிரதிநிதிகளை கௌரவிக்கும் முகமாக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற போது இராணுவத் தளபதி, முப்படையினரின் திறமைகளை பாராட்டியுள்ளார்.
நேபாளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் நேற்று நாடு திரும்பியிருந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten