தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம்: துமிந்த திஸாநாயக்க



மகிந்தவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடுவதில்லை!- விமல் வீரவன்ச
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 06:40.39 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் புதிய தேசிய கூட்டணியில் மகிந்த ராஜபக்சவை பொது தேர்தலுக்கு அழைத்துவருதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தள்ளார்.
நேற்று பிபிலயில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பட்டுள்ளார்.
நமது நாடு சந்திக்கும் பாரிய அனர்த்தத்திலிருந்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ச பற்றி குறிப்பிடும் கருத்துக்கள் எதுவும் அவருடைய சொந்த கருத்துக்கள் அல்ல.
தற்போதைய அரசாங்கம் அறிவிக்கும் அறிக்கைகள் அனைத்தும் பனி மழை போல் உருகிக்கொண்டிருக்கின்றது.
முன்னோக்கி சென்று கொண்டிருந்த நாடு இன்று ஒரு இடத்தில் அப்படியே நின்றுவிட்டது.
பொது தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றாலும் மகிந்தவை பிரதம வேட்பாளராக்கும் போராட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


பாகிஸ்தானில் உயர் மட்டங்களைச் சந்தித்த மைத்திரி: பல ஒப்பந்தங்கள் கைச்சாத்து
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 07:28.01 AM GMT ]
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இருநாட்டு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒப்பந்தங்கள் நேற்று இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
போதைப்பொருள், சுவாசக்கட்டமைப்பிற்குக் கேடு விளைவிக்கும், அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் மூலப்பொருட்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக விநியோகம் செய்வதை முழுமையாக நிறுத்துவது உட்பட இரண்டு ஒப்பந்தங்கள் மற்றும் மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி ஆகியோர் இலங்கையின் சார்பிலும் பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் சர்தாஜ் அம்ஸ், பாதுகாப்பு அமைச்சர் கச்சா மொகமட் மற்றும் அமைச்சர்கள் ரியாஸ் ஹுசேன் பீர்ஸ்டா, கம்ரான் மிச்சேல் முஸாதிதுல்லா கான் ஆகியோர் பாகிஸ்தான் சார்பிலும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். 
 பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒப்பந்தம்.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாகிஸ்தான் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தம்.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் அணுசக்தி மற்றும் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக்குழுவுக்குமிடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களே நேற்று கைச்சாத்திடப்பட்டன.
நேற்றைய தினம் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தையையடுத்தே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
1
1
1
1
1
1


தினேஷை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 07:43.46 AM GMT ]
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரி உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதமொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில 54 உறுப்பிர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிமல் சிறிபாலடி சில்வாவிற்கு ஆதரவு வழங்கிய சில உறுப்பினர்கள் தினேஷ் குணவர்தனவை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இதேவைளை இன்று பகல் பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச முற்றுப்புள்ளி வைக்கவுள்ளார் என்று குறிப்பிடப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஆராய வேண்டும்: சபாநாயகர்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 10:01.47 AM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர் குறித்து தீர்மானிக்க கால அவகாசம் தேவை என சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது இதன் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும், இது குறித்து தீர்மானம் எடுக்க தமக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான சர்ச்சை எழுதிருந்த நிலையில், இன்று தாம் அதுபற்றிய முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதேவேளை, தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இன்று பிற்பகல் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


 மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம்: துமிந்த திஸாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 10:34.39 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் அன்று இருந்த வெறுப்பு இன்று சகோதரத்துவமாக மாறியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாங்களும் அன்று கட்சியை விட்டு வெளியில் வந்ததும் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்ல என கூறியிருந்தார்கள். அன்று நாங்கள் அப்படி செய்திருக்காவிட்டால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்திருக்கும்.
அப்படி செய்யாமல் இருந்திருந்தால் 1994 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாத்து வந்த ஜனாதிபதி அதிகாரத்தை வேறு ஒரு கட்சிக்கு வழங்க நேரிட்டிருக்கும்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் வெற்றியடைந்த சந்தர்ப்பத்தில் சுதந்திர கட்சியினரை தாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றியடைந்ததும் ஐக்கிய தேசிய கட்சியினரை தாக்கினார்கள் அவ்வாறானதொரு நல்லாட்சியா இன்று காணப்படுகின்றது?
இந்த இரண்டு கட்சிக்கும் இடையில் கடந்த காலங்களில் காணப்பட்டது வெறுப்பு மாத்திரமே ஆனால் இன்று சகோதரத்துவம் மாத்திரமே காணப்படுகின்றது. ஆனால் இந்த விடயத்தில் சிலர் இன்று குழம்பி போயுள்ளார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktyE.html

Geen opmerkingen:

Een reactie posten