துன்னாலையில் குழு மோதல் : நால்வர் வைத்தியசாலையில்
[ Apr 12, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 5180 ]
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (10) இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட குழு மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் சனிக்கிழமை (11) தெரிவித்தனர். துன்னாலை கலகை கந்தன் ஆலயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துன்னாலை தக்குச்சம்பாட்டி மற்றும் கலிகை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மைத்திரியின் அதிரடி நடவடிக்கை: மகிந்த அனுதாபிகளை தூக்கி வீசினார் !
[ Apr 12, 2015 05:59:47 AM | வாசித்தோர் : 7710 ]
சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு தலையிடி கொடுக்கும் விதத்தில் மகிந்த ராஜபக்சவின் பின்னணியில் செயற்பட்ட அரசியலணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாடுகளிற்கு செவிசாய்க்காமல் மகிந்தவின் அரசியல் மீள்வரவிற்கு பாதையமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த பந்துல குணவர்த்தன, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி.ஏக்கநாயக்க, சாலித திசநாயக்க ஆகியோரை சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கியுள்ளார் மைத்திரி.
சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற முறையில், ஜனாதிபதி மைத்திரி தனது கையொப்பத்துடன் இவர்களிற்கு இந்த அறிவித்தலை கடிதம்மூலம் அறிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டாலும், இன்னும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களாவே இருப்பதாக பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten