காசை எப்படி குறுக்கு வழியில் உழைப்பது என்று புத்தம் அடிக்கிறார்கள். அதனை கூட ஓகே என்று சொல்லலாம். ஆனால் பஞ்சப்பட்ட நாட்டில் இருந்து , விமானத்தின் சக்கரத்தில் ஏறி வேறு நாடு ஒன்றுக்கு எப்படிச் செல்லலாம் என்று ஆலோசனை , கூறும் புத்தகத்தை கூட அச்சடித்து விற்கிறார்கள் என்றால் நம்புவீர்களா ? இதனை வாசித்த இளைஞர் ஒருவர் , அதில் குறிப்பிட்டதுபோல களவாக விமான ஓடுபாதை சென்று அங்கே புறப்பட தயாராக இருந்த விமானத்தின் சக்கரத்தினுள் நுளைந்துவிட்டார். 36,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தவேளை கீழ் உள்ள சக்கரம் பொருந்தும் இடத்தில் அவன் மறைந்து இருந்துள்ளான்.
சுமத்திரா தீவுகளில் வசித்துவந்த 21 வயதான , மரியோ என்னும் இளைஞனே இவ்வாறு விமானத்தின் சக்கரத்தில் ஏறி ஜக்கராத் சென்றுள்ளார். விமானத்தின் சக்கரத்தினுள் ஏறி ஒளிந்துகொள்வது ஒன்றும் புதிதான விடையம் அல்ல. இதுபோன்று பலர் , முன்னர் செய்து பிறநாடுகளுக்கு விசா இல்லாமலே சென்றுள்ளார்கள். ஆனால் இது ஒரு படு ஆபத்தான விடையம். சிலவேளை சக்கரம் உள்ளே செல்லும்போது சரியான இடத்தில் நிலைகொள்ளாவிட்டால் அங்கே நசுங்கியே சாகவேண்டிய சூழ் நிலை உருவாகும். மேலும் ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை கடும் குளிரில் மாட்டி இறக்கவும் நேரிடும்.
ஆனால் சில வறிய நாடுகளில் உள்ள இளைஞர்கள் , தாம் செத்துப்போனாலும் பரவாயில்லை வேறு நாட்டிற்குச் சென்று வாழவேண்டும் என்று வைராக்கியமாக உள்ளார்கள். அவர்களுக்கு இவை எல்லாம் ஒரு தூசி தான் போங்கள் !
Geen opmerkingen:
Een reactie posten