[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 12:12.19 AM GMT ]
அவர் அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலருடன் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 6 நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடைந்த அவர் பலதரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார்.
இன்று புதன்கிழமை வடக்கிற்கு செல்லவுள்ள அவர், அங்கு வடக்கு மாகாணசபையினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக, தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்!
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 01:47.51 AM GMT ]
வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி தமிழ் வாக்காளர்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் செயற்படுவதனைப் போன்றே நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த கூட்டணி செயற்படத் திட்டமிட்டுள்ளது.
தெற்கு மற்றும் மலையக அரசியல்வாதிகளுக்கு இடையில் இந்தக் கூட்டணி அமைப்பது குறித்த ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் பூர்த்தியாகியுள்ளன.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதனைப் போன்று நாட்டின் ஏனைய பகுதிகளில் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு கூடுதல் அரசியல் செல்வாக்கினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாடாளுமன்றில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக மாறுவதே இந்த புதிய கூட்டணியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் இல்லையா? நாமல் கேள்வி
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 04:06.24 AM GMT ]
ஹம்பாந்தோட்டையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய வேலைத்திட்டத்தில் பல வேலைகளை பகிர்ந்து செய்கின்றார்கள். வடக்கு கடல் எல்லையில் இந்தியாவுடன் இணைந்து பகிர்ந்து தான் மீன் பிடிக்கிறார்கள்.
ஆனால் இந்திய மீனவர்களுக்கு புதுவருடத்தின் போது இலங்கையில் மூன்று நாட்கள் தங்க முடியும். எனினும் இந்தியாவிற்கு சென்று இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க சந்தர்ப்பங்கள் இல்லை என நினைக்கிறேன்.
இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் ஒருவர் போன்றே இதனை கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை இரண்டாக பிரிக்க முடியாதென்ற கருத்திலே நாங்கள் உள்ளோம்.
இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என தேசியவாதத்தினுள் தான் நாங்கள் அரசியல் செய்தோம்.
எங்கள் தேசியத்தை பாதுகாக்க வேண்டுமென்றதில் மிக கவனத்துடன் செயற்படுகிறார்கள் என்ற நம்பிக்கையிலே நாங்கள் உள்ளோம். அதனை ஓரம்கட்டிவிட்டு இலங்கையில் மீன் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால், அதன் பின்னர் என்ன நடக்கும்?
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என்ன நடக்கும்? நாட்டில் தேசியம் பாதுகாக்கப்படும் என நாங்கள் நம்புகின்றோம் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
19வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக மனு தாக்கல்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 04:24.40 AM GMT ]
இந்த மனு நேற்றைய தினம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே சுமந்திரன் குறித்த திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அரசியலமைப்பு திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியமில்லை என தான் வாதாட போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது அரசியலமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் விசாரணைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUko5I.html
Geen opmerkingen:
Een reactie posten