தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 april 2014

பயங்கரவாதம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்!- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 04:19.48 PM GMT ]
முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இடையில் பிளவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் பெரும்பாலும் சுனி இன முஸ்லிம்களே அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். எனினும், கிழக்கி;ல் இஸ்லாமிய மத வழிபாட்டு முறைகளின் அடிப்படையில் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
1980களில் முதல் முதலாக கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு முதல் இஸ்லாமிய மத பிரிவுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின.
முஸ்லிம் மதங்களுக்கு இடையிலான அண்மைய முரண்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிலை உடைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், மத குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் என முஸ்லிம்களுக்கு இடையிலான முரண்பாடு அதிகரித்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETXLWgw7.html
பயங்கரவாதம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்!- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 04:12.06 PM GMT ]
இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதும், எந்நேரமும் அதுபற்றி அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கை மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று நடாத்தப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் தகவல் திரட்டல் குறித்து எந்த தரப்பினருக்கும் கேள்வியெழுப்ப முடியாது.
புலம்பெயர்ந்த அமைப்புகள் சில தொடர்ந்தும் பிரிவினைவாதம் எனும் கனவினை இன்னும் கைவிடவில்லை.
நாங்கள் அதற்கு ஏற்றவகையில் எதிராக செயற்படவேண்டியது அவசியமாகிறது.
30 வருடகால காலத்தில் மிக அதிகமான இழப்பின் மூலம் நாம் பயங்கரவாதத்தை முறியடித்தோம்.
இதுகுறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டும்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள சிங்கப்பூரின் வெளிவிவகார மற்றும் நீதியமைச்சர் கே.சண்முகமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyETXLWgw6.html

Geen opmerkingen:

Een reactie posten