இலங்கை மக்கள் சர்வதேச விசாரணகளை விரும்பவில்லை சஞ்சிகை ஆய்வு
மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதனை இலங்கை மக்கள் விரும்பவில்லை என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியாகும் வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி என்னும் சஞ்சிகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ஓர் சுயாதீன நாடு எனவும், விசாரணைகளை உள்ளக ரீதியாக நடத்தப்பட வேண்டுமெனவும் மக்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து பலம்பொருந்திய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை தேவைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், அரசியல் தலையீடுகள் குறைக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன மத முரண்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்,
இதேவேளை இந்த வர்த்தக சஞ்சிகை முன்னர் நடத்திய பல ஆய்வு முடிவுகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மறைமுகமாக பணக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தமை குறிப்படத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/65283.html
நெடியவன், ருத்ரகுமாரன், பிதா இமானுவல், அடெல் பிணமாக வேண்டும் கொலை வெறியில் ஜாதிக ஹெல உறுமய
புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே நாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகளின் மூலம் நந்தகோபன் என்ற புலி உறுப்பினர், மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். நந்தகோபன், நோர்வே நெடியவன் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நந்தகோபனை கைது செய்ததனைப் போன்றே ஏனைய புலிச் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65286.html
Geen opmerkingen:
Een reactie posten