தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 april 2014

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்பாமைக்கு இலங்கை அரசாங்கமே காரணம்!- விக்கிலீக்ஸ்

தமிழரசுக் கட்சியை தடை செய்யுமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல்!
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 12:00.30 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழரசு கட்சியை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி நாட்டில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்ட கட்சி என தீர்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வேறும் இராச்சியமொன்றை அமைப்பதற்கு எந்த வகையிலும் இலங்கைப் பிரஜைகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சியும் செயற்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
களனி பொல்ஹேன என்னும் இடத்தைச் சேர்ந்த ஹிக்கட்டுவ கோரலகே தொன் சந்திரசோம என்பவரினால் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா,  தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட நபரோ அல்லது அரசியல் கட்சியொன்றோ நாட்டை பிளவுபடுத்தும் வகையில் செயற்பட்டால் அதற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWev4.html
புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்பாமைக்கு இலங்கை அரசாங்கமே காரணம்!- விக்கிலீக்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 12:08.06 AM GMT ]
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்பாமைக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா ஏ புட்டினிஸ், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்திருந்ததாக, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் வாசிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புட்டினிஸ் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி, உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கின் வலியுறுத்தலுக்கு அமைவாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்துள்ளார்.
இதன்போது சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை, எம்.டி.வி வலையமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை விதிக்க முற்படுவதாக கூறிய, பாலித்த கோஹன்னவை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை போன்ற விடயங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் வெளிநாடுகளுக்கு பிழையான சமிக்ஞைகளை அனுப்புவதாகவும், அதனாலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து, அபிவிருத்திகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் புட்டினிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக போகொல்லாகம உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWev5.html

Geen opmerkingen:

Een reactie posten