தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா!


காங்கிரஸ் செய்த கொடூரமான துரோகத்தை பி.ஜே.பி. செய்யாது!- வைகோ உறுதி
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 06:23.58 AM GMT ] [ விகடன் ]
காங்கிரஸ் செய்த கொடூரமான துரோகத்தை நிச்சயமாக பி.ஜே.பி. செய்யாது. இலங்கைக்கு இராணுவ உதவி செய்ய மாட்டோம், ஆயுதங்களை விலைக்குக்கூட விற்க மாட்டோம்’ என்ற முடிவை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் வரை உறுதியாகக் கடைப்பிடித்தார். ஆயுதங்களையும் கொடுக்கவில்லை, சிங்களக் கொடூர ஆட்சிக்கு ஆதரவும் வழங்கவில்லை என்றார் மதிமுக செயலாளர் வை.கோபாலசாமி அவர்கள்.
விருதுநகர் தொகுதியில் தனக்காக பிரசாரம்... இன்னொரு பக்கம் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுக்க பம்பரமாகச் சுழன்று வருகிறார் வைகோ.
விருதுநகரில் இறுதிகட்டப் பிரசாரத்தில் இருந்த வைகோ ஈழத்தமிழர் குறித்து பாஜகவின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்கையில்,
மதவாத பி.ஜே.பி-யுடன் நீங்கள் கூட்டுச் சேர்ந்தது தவறு என்று உங்களது தீவிரமான தமிழ் ஆதரவு நண்பர்களே சொல்கிறார்களே?
இனத்துக்காகவும் மொழிக்காவும் பல்வேறு துன்ப துயரங்களைத் தாங்கிப் போராடி வரும் தமிழ்த் தேசிய, தமிழீழ ஆதரவு தோழர்களை நான் என்றும் மதிக்கக் கூடியவன். அவர்களது லட்சியம் என்ன? காங்கிரஸை வீழ்த்துவது தானே! அதற்காகத்தான் நான் பி.ஜே.பி. யுடன் கைகோத்துள்ளேன்.
லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவுக்கு துணை​போன காங்கிரஸை, நம்முடைய குழந்தைச் செல்வங்​களை கருவி​லேயே குலைத்துப் போட்ட சிங்களப் பேரினவாதத்துக்கு அனுசரணையாக இருந்த காங்கிரஸை, உலகத்தால் வெல்ல முடியாத தமிழர் படை என்று போற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வீழ்த்துவதற்காக ராடாரும் இராணுவக் கருவிகளும் கொடுத்து உதவிய காங்கிரஸை, மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதுதானே தமிழீழ ஆதரவாளர்களது லட்சியம். அதனைச் செய்யும் பலம் பி.ஜே.பி க்கு மட்டும்தானே இருக்கிறது?
உலக மனசாட்சியின் முன்னால் ராஜபக்ச தலைகுனிந்து நிற்கிறான். ஐ.நா.மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறான். பல்வேறு நாட்டு நீதிமன்றங்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் நடந்ததை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ராஜபக்சவுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு இங்கு மீண்டும் மலருமானால் ராஜபக்ச நிச்சயம் காப்பாற்றப்படுவான். எனவே, மத்தியில் காங்கிரஸ் அரசை வைத்துக் கொண்டு ஈழத் தமிழருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. காங்கிரஸை வீழ்த்துவதற்கு வேறு யாரை ஆதரிக்க முடியும்?
ஈழத் தமிழர் பிரச்சினையில் பி.ஜே.பி. நீங்கள் விரும்பும் நிலைப்பாட்டை எடுக்குமா?
காங்கிரஸ் செய்த கொடூரமான துரோகத்தை நிச்சயமாக பி.ஜே.பி. செய்யாது. இலங்கைக்கு இராணுவ உதவி செய்ய மாட்டோம், ஆயுதங்களை விலைக்குக்கூட விற்க மாட்டோம்’ என்ற முடிவை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் வரை உறுதியாகக் கடைப்பிடித்தார். ஆயுதங்களையும் தரவில்லை, சிங்களக் கொடூர ஆட்சிக்கு ஆதரவும் தரவில்லை.
திடீரென ஒருநாள் பாலசிங்கம் எனக்கு போன் செய்து, தலைவர் உங்களிடம் பேசச் சொன்னார். எங்களுக்கு வந்த கப்பலை இந்தியக் கடற்படை மடக்கிவிட்டது. இதனால் நமக்கு பெரும் இழப்பு என்று சொல்லச் சொன்னார்  என்று தகவல் தந்தார். உடனே, அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸை சந்தித்தேன். அவர் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கச் சொன்னார்.
நீங்கள்தானே இலங்கைக்கு பாகிஸ்தானும் சீனாவும் உதவி செய்கின்றன என்று சொன்னீர்கள். நம்முடைய எதிரி நாடுகளோடு சண்டை போடும் புலிகளுக்குப் போகும் கப்பலை ஏன் தடுக்க வேண்டும்? என்று கேட்டேன். அதிகாரிகளை அழைத்துப் பேசினார்.
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு புலிகளுக்குப் போன கப்பலை தடுக்கவில்லை. ஆட்சி மாறியது. காங்கிரஸ் அரசு புலிகளுக்குச் சென்ற கப்பல்கள் அனைத்தையும் தடுத்தது. இத்தகைய துரோகங்களை பி.ஜே.பி. அரசு நிச்சயம் செய்யாது அல்லவா?
திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பி.ஜே.பி-யுடன் சேரலாமா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்கிறாரே?
அண்ணன் வீரமணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நாங்கள் திராவிட இயக்கமா என்று சந்தேகப்படுபவர்கள், 1999-ம் ஆண்டு முதல் 2004 வரைக்கும் பி.ஜே.பி. கூட்டணியில் இருந்த தி.மு.க-வை என்ன சொல்கிறார்கள்? அவர்கள் திராவிட இயக்கமா... இல்லையா? எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எங்களது தனித்தன்மையை நாங்கள் விட்டுத்தர மாட்டோம்.
டெல்லியில் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த வழக்கறிஞர்கள் மாநாட்டில் மதச்சார்பின்மை, சமூக நீதி, மனித உரிமையை வலியுறுத்தித்தான் நான் பேசியிருக்கிறேன்.
தோளில் போட்டுள்ள துண்டு, கடைசி வரைக்கும் கறுப்புத் துண்டாகத்தான் இருக்கும். மஞ்சளாக மாறவே மாறாது!
சர்வதேச விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார்: பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 06:48.04 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரில் பங்கேற்ற படையினரை நான் பாதுகாப்பேன்.  ஆனால், ஜனாதிபதி மகிந்ததவின் குடும்பத்தினது மனிதஉரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களை அளிப்பேன்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அண்மையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இந்த அரசாங்கத்தின் மனிதஉரிமை மீறல்களுக்கான கடைசி உதாரணம்.
இந்த தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் இராஜ் ரவீந்திர பெர்னான்டோ உள்ளிட்டவர்களைக் கைது செய்ய அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா?
அரசாங்கத்தின் ஊழல் திட்டங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மனிதஉரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன.
இந்த தாக்குதல் ஜெனிவா தீர்மானத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten