[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 03:18.33 AM GMT ]
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையைின் போது 384 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் பலர் நாடு கடத்தப்படடுள்ளனர் என திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் வரும் அதிகளவான வெளிநாட்டவர்கள், தொழில் செய்யும் நோக்குடன் வருகை தருவதாகவும், இதனால் தங்கள் விசா காலம் முடிவடைந்தும் நீண்டகாலம் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, ஆப்கானிஸ்தான், சீனா, பாலி தீவுகள், நைஜீரியா, பப்புவா நியூ கினி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேரந்த 22 சுற்றுலா பயணிகள் மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWft6.html
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: இலங்கையிடம் ஐ.நா செயலாளர் கோரிக்கை
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 07:18.07 AM GMT ]
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடததப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் எந்த அவசியமும் இலங்கைக்கு இல்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நடத்தப்பட உள்ள சர்வதேச விசாரணை நடவடிக்கைகளுக்கு இலங்கை உரிய வினைத்திறனான பங்களிப்பை வழங்கும் என தான் எண்ணுவதாகவும் ஐ.நா செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளை பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னரான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் நவநீதம்பிள்ளை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 23 பிரதிநிதிகளின் வாக்குகளால் நிறைவேற்றப்படடது.
தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் அடிப்படையில், இலங்கையில் நடைபெற்ற போரில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடத்தப்படும் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க இலங்கை அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ளது.
மேலும் இலங்கை பாதுகாப்பு படையினர், நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு வெலிவேரியவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் உட்பட அது போன்ற வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த அறிக்கைகளை எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்த வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWfu0.html
Geen opmerkingen:
Een reactie posten