[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 08:53.13 AM GMT ]
அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வுக்கு நடுவே, அதற்கு சமாந்தரமாகப் பக்கத்தே நடைபெற்ற ஒன்றுகூடல் நிழ்வுகளின் போது உரையாற்றிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு குறிப்பிட்ட விடயங்கள் குறித்துக் கேள்விப்பட்டதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீற்றம் கொண்டார் என கொழும்பு ஆங்கில் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இலங்கையில் 'இனவழிப்பு' இடம்பெற்றிருப்பதாக அனந்தி சசிதரன் தமது உரையில் குறிப்பிட்டார் என்றும் இதுவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சீற்றமுற வைத்தது என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.
அனந்தியின் உரை பற்றி அறிந்ததும் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்விடயம் குறித்து அமைச்சரவைக்குக் குறிப்பு ஒன்றை அனுப்பினார்.
அனந்தியின் உரை சர்வதேசத்துக்கு தவறான தகவல்களை வழங்கி நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது என்றும் அத்தகைய தீவிரப் போக்குக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்தக் குறிப்பு மூலம் கோரினார்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அனந்தி விடுதலைப் புலிகளுக்கு சிறுவர்களை ஆள் சேர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தவர் என்றும் அவர் தனது குறிப்பில் சுட்டிக் காட்டினாராம்!
அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று ஊடாக மேற்படி கூட்டங்களுக்குள் பிரவேசித்து அனந்தி, சர்வதேசத்தின் கண்களில் நாட்டுக்குக் கெட்டபெயரை வாங்கித் தருகின்றார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டாராம்.
இந்த விடயங்கள் குறித்து அமைச்சரவை ஆராய்ந்தது. வடக்கு மாகாணத்தின் உண்மை நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தாம் நேரடியாகவும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலமும் சர்வதேசத்துக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நாட்டுக்குள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.
அனந்தி சசிதரன் நாடு திரும்பியவுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மூலம் அவரை விசாரணை செய்ய வேண்டும் என்ற முன்னைய திட்டம் கைவிடப்பட்டதாம்.
அனந்தியின் இலங்கைக்கு எதிரான வெளிப்பாடுகள் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் அவரைக் கைது செய்து அவருக்கு 'கதாநாயகி' அந்தஸ்து பெற்றுக் கொடுக்க நாம் விரும்பவில்லை" - என்றார் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி. இப்படி அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlqy.html
நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்ய உதவுமாறு இன்டர்போலிடம் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 08:37.31 AM GMT ]
வெளிநாடுகளில் இருந்து அவ்வாறு செயற்படும் சில நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய நபர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப வவுனியாவில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட கோபி உட்பட மூவருக்கு நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோரே ஐரோப்பாவில் இருந்து நிதி வழங்கியதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlp6.html
Geen opmerkingen:
Een reactie posten