[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 05:55.42 AM GMT ]
அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக செய்யவில்லை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
எவ்வாறாயினும் இந்த தீர்மானம் ஊடாக தமிழ் மக்களுக்கு நிவாரணம் ஒன்று கிடைக்கும் என்பது இரகசியமானதல்ல எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
உலக தமிழர் பேரவை உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இலங்கை சேர்த்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அருட் தந்தை இம்மானுவேல் உட்பட தடைசெய்யப்பட்ட 424 நபர்கள் மற்றும் அமைப்புகள் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை அருட் தந்தை இம்மானுவேல் மறுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWfuz.html
தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- புலம்பெயர் அமைப்புக்கள்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 10:02.10 AM GMT ]
உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யபபட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளன.
அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை சர்வதேச சமூகம் நிராகரிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது.
தமிழீழ இராச்சியத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய தமிழர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தடையை திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWfvz.html
விடுதலைப் புலிகளைத் தடை செய்த கனடா, அதன் ஆதரவு அமைப்புக்களை தடை செய்யவில்லை: விக்கிலீக்ஸ்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 01:40.59 PM GMT ]
கனடா அரசாங்கம் 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்த கனடிய அரசாங்கம், அதற்கு ஆதரவாக இயங்கும் முன்னணி தமிழ் அமைப்புகளை தடை செய்யவில்லையனெ விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 8 அமைப்புக்கள் கனடாவில் செயற்படுவதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருந்தனர்.
எனினும் கனடிய அரசாங்கம் அவ்வமைப்புக்களை தடை செய்யும் முனைப்புக்களை எடுக்கவில்லை என ஒட்டோவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வோஷிங்டனுக்கு அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்ககை்கு வெளியில் கனடாவிலேயே அதிகமான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், ரொரான்டோவில் வசிக்கின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகளில் அதிகளவான நிதி கனடாவிலிருந்தே கிடைதுத்துள்ளது. கனடாவிலிருந்து மாத்திரம் வருடாந்தம் 1முதல் 10 மில்லியன் டொலர் வரையான நிதி கிடைத்து வந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETZLWfv6.html
Geen opmerkingen:
Een reactie posten