தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 april 2014

நெடுங்கேணியில் புலிகளுடன் மோதல் இராணுவம் மரணம்! தலைவர் கோபியும் மரணமாம்??

நந்தகோபனின் ஏழாலை வீடும் திடீர் சுற்றிவளைப்பு…

கைதுசெய்யப்பட்டு மலேசியாவில் இருந்து இலங்கை கொண்டுசெல்லப்பட்ட புலிகளின் முக்கிய பிரமுகர் நந்தகோபனிடம், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
யாழ் ஏழாலையில் உள்ள நந்தகோபனின் உறவினர்கள் வீடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நந்தகோபன் வெளிநாட்டில் உள்ளவேளை எந்த நாடுகளுக்கு பயணித்தார் மற்றும் யார் யாருடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்று பயங்கரவாதப் பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்
http://www.jvpnews.com/srilanka/65253.html

நெடுங்கேணியில் புலிகளுடன் மோதல் இராணுவம் மரணம்! தலைவர் கோபியும் மரணமாம்??

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் கோபி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலுபிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் இராணுவத்தினருக்கும் கோபி குழுவினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை பதவியா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிரிழந்த மூவரின் சடலங்கள் தொடர்பில் இரர்ணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவ்வாறு உயிரிழந்தவர்களில் கோபியும் அடங்குகின்றாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/65268.html

Geen opmerkingen:

Een reactie posten