தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 april 2014

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! புலம்பெயர்ந்த அமைப்புக்கள் இலங்கையினால் பயங்கரவாத பட்டியலில் இணைப்பு

விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ள வெளிநாடுகளில் இயங்கும் பல குழுக்கள் இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசாங்கத் தரப்புக்களை மேற்கோள்காட்டி இலங்கை ஆங்கில செய்திச் சேவை ஒன்று இதனை இன்று காலை செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை யோசனையின் கீழ் 15 குழுக்களின் பெயர்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நிதிகளை கட்டுப்படுத்தல் உட்பட்ட பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யோசனையின் போது குறித்த புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பாரிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.
இதேவேளை கே.பி. செல்வநாயகம் ஏ கே ஏ கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைவதாக அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் அறிவித்துள்ளது.
கோபி என்பவர் ஏற்கனவே வெளிநாட்டில் வசித்து வந்தநிலையில் தற்போது இலங்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர். ஏற்கனவே வேலையற்ற இளைஞர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார் என்றும் அரசாங்கம் ஜெனீவாவில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்தநிலையில் புலம்பெயர்ந்த அமைப்புக்களை பயங்கரவாத பட்டியலில் இணைப்பது தொடர்பில், இலங்கை அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையினால், தடைசெய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்:
1.தமிழீழ விடுதலை புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழ் மன்றம்
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழ் மன்றம்
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞ்சர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் கூட்டம்
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhu0.html

Geen opmerkingen:

Een reactie posten