தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 juni 2013

மனைவியைத் தீ மூட்டிக் கொலை செய்த சந்தேகத்தில் கணவன் கைது- போதைப் பொருள் பாவனை முற்றாக குறைவு (யாழ்.செய்தித் துளிகள்)


ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தலைமறைவாய் இருந்த அப்பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
கடந்த மே 29ம் திகதி யாழ்ப்பாணம் பூம்புகர் நாவலடிப் பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்து.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். இந்த விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் போதைப் பொருளின் பாவனை, விற்பனை முழுமையான குறைவடைந்து – யாழ்.பொலிஸ்
யாழ். குடாநாட்டில் போதைப் பொருளின் பாவனை மற்றும் விற்பனை முழுமையான குறைவடைந்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக போதைப் பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து போதைப் பொருட்கள் எடுத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் போதைப் பொருட்கள் தொடர்பில் இந்த 5 மாதங்களில் 150 வழக்குகள் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கஞ்சா தொடர்பில் 128 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் பொலிஸார் விளிப்பாக இருப்பதாகவும் பொதுமக்கள் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten