தமிழ் மக்களுக்கெதிரான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்றினை பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 23ம் திகதி லண்டன் டௌனிங் வீதியிலுள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக பிற்பகல் 4.00 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்ட நினைவெழுச்சி நிகழ்வில், பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொள்வதற்கெதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறும்.
மேலும், இலங்கையில் தமிழர் தாயக பகுதிகளில் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட இனவழிப்பு மற்றும் வேகமாக மேற்கொண்டு வரும் நில அபகரிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையிலும் இது விடயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten