தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

இவரை தமிழினம் எப்படி மன்னிக்கும் ? சுப்பிரமணிய சுவாமியின் அட்டகாசம் !


சில நாட்களுக்கு முன்னர் இலங்கை சென்ற ஜனாதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி அங்கே மகிந்தரை சந்தித்துள்ளார். மகிந்தரைச் சந்தித்த சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தாம் தீர்த்துவைப்பதாக மகிந்தருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து இவர் அமெரிக்கா சென்று பராக் ஒபாமா அவர்களைச் சந்தித்துள்ளார். பராக் ஒபாமாவிடம் , இலங்கை தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி பேசியுள்ளார். இலங்கை அதிபர் மகிந்தர் கொடுத்த சில வாக்குறுதிகளை இவர் கொண்டுசென்று பராக் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது.

இதனையடுத்தே அமெரிக்கா தனது தீர்மாணத்தில் உள்ள சில விடையங்களை தளர்த்தியுள்ளது என அறியப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசின் முகவராக சுப்பிரமணிய சுவாமி அவர்கள் செயல்பட்டு வருகிறார் என்பது தற்போது ஆதாரத்தோடு நிரூபனமாகியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten