இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் , திருமாவளவன் , வன்னி அரசு, சு.ப .வீரபாண்டியன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர், இளங்கோவன் மற்றும் பல உறுப்பினர்கள் அங்கு சென்றனர். மாணவர்கள் இருக்கும் மேடைக்கு சென்ற சு.ப .வீரபாண்டியன், மாணவர்களிடத்தில் உண்ணாவிரத கோரிக்கையை மாற்றி அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்று மாணவர்கள் தரப்பால் கூறப்பட்டுள்ளது. இதனை அறிந்த உணர்வாளர்கள் அவருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். அவர்கள் சுப வீரபாண்டியனைத்தான் எதிர்த்து கோசம் போட்டார்கள் ஆனால் ஆத்திரமடைந்த ,சுப வீரபாண்டியனோடு வந்த சிலர், அங்கிருந்த உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடிக்கச் சென்றதால் அவர்களிற்கு இடையே தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டது .
திமுக வில் உள்ள வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள், எப்படியாவது கலைஞரைக் கொண்டு, மத்திய அரசுக்கு அழுத்ததைக் கொடுத்து இலங்கை ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்று பாடுபட்டு வருகின்றனர். ஆனால் கலைஞரோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் சுபவி ரி.ஆர் பாலு போன்றவர்கள், காங்கிரஸ் அரசின் கைக்கூலிகளாகவே இன்னும் இருந்துவருகிறார்கள். இவர்களே 13 வது திருத்தச்சடத்தை அமுல்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச சுயாதீன விசாரணை தேவையில்லை மீள் குடியேற்றமே தேவை என்றும் பேசிவருகிறார்கள். இந்த சொதப்பல்காரர்களால், திமுக வால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கையும் பாதிப்படைகிறது. சர்வதேச சுயாதீன விசாரணை தேவையில்லை என்று கூறிவரும் சுபவி மற்றும் ரி.ஆர் பாலு போன்றவர்கள், இலங்கையில் நடந்த போர்குற்றங்களை மூடி மறைக்கப்பாக்கிறார்கள் என்பதே உண்மை நிலையாகும்.
Geen opmerkingen:
Een reactie posten