விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்ந்தும் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக சர்வதேச இன்டர்போல் அறிவித்துள்ளது.
குமரன் பத்மநாதனுக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்து உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும் சர்வதேச காவல்துறையினரின் தேடப்பட்டு வருவோரின் சிகப்புப் பட்டியலில் அவரது பெயர் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் இந்தியாவின் நீதிமன்றம் ஒன்றினால், குமரன் பத்மநாதனை கைதுசெய்யுமாறு சர்வதேச இன்டர்போல் மையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, குமரன் பத்மநாதனை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjt0.html
Geen opmerkingen:
Een reactie posten