திருகோணமலையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் ஏனைய அனைத்து தமிழர் கொலை குறித்தும் சர்வதேச விசாரணை தேவை என்று அந்தச் சம்பவத்தில் தனது மகனை இழந்த டாக்டர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்கரையில் 2006ம் ஆண்டு 5 தமிழ் மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி டாக்டர் மனோகரன் அவர்கள் போராடி வருகின்றார்.
அவருடைய மகனான ரஜிகரும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.
ஆயினும் இதுவரை அந்த கொலைகள் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறும் மனோகரன் அவர்கள், ஜெனிவாவில் நடக்கும் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக தனது கருத்துக்களை எடுத்துவைத்தார்.
இந்தக் கொலைகள் உட்பட, இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் குறித்து இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று அங்கு பேசிய மனோகரன் அவர்கள், ஆகவே இது குறித்து சர்வதேச குற்ற விசாரணை ஒன்று தேவை என்று கூறினார்.
http://news.lankasri.com/show-RUmryDSZNYgx2.html
Geen opmerkingen:
Een reactie posten