தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

ஈழத் தமிழர் விவகாரம்: டில்லி பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை !


நேற்று(06) டில்லியில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் லோக் சபாவில் அதிமுக மற்றும் திமுக எம்.பீக்கள் இலங்கைத் தமிழர் தொடர்பான பிரச்சனையைக் கிளப்பியுள்ளார்கள். உத்திர பிரதேச விவகாரம் ஏற்கனவே சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக எம்.பீக்கள் கறுப்பு உடை அணித்துவந்து தமது எதிர்ப்பைக் காட்டினார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் , இந்தியா அமெரிக்க தீர்மாணத்தை ஏற்க்கவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னரே மீண்டும் அவை கூடி விவாதங்களை ஆரம்பித்தது. பாலச்சந்திரன் கொலை தொடர்பான உணர்வலைகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது. டெல்லி, தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள ஊடகங்கள் பாலச்சந்திரன் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten