தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

ஐ.நா.வில் இலங்கை செய்யும் முக்கிய தந்திரம் எது ?


ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு பதிலடி கொடுக்க, இலங்கையில் இருந்து ஒரு குழு கிளம்பிச் சென்றது. இவ்விடையம் யாவரும் அறிந்ததே. ஆனால் அறியப்படாத விடையமும் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் ஐ.நா செல்லும் குழுவில் எந்த ஒரு இராணுவ அதிகாரியையும் அவர்கள் இணைத்துக்கொள்ளவில்லை என்பதுதான். இலங்கைக்கு எதிரான இந்த விவகாரம், ராணுவம் தொடர்புடையது என்பதால், இலங்கைக் குழுவில் ராணுவ உயரதிகாரிகளும் இடம்பெற வேண்டும் என்று ஒரு கோரிக்கை, ஜெனீவா சென்ற இலங்கை குழுவிடம் முன்வைக்கப்பட்டதாம். ஆனால், இலங்கை பாதுகாப்பு அமைச்சு, ஜெனீவாவுக்கு ராணுவ அதிகாரிகள் யாரையும் அனுப்ப மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

“இலங்கை ராணுவம், அமெரிக்காவுடன் மோதல் போக்கை வைத்துக்கொள்ள வேண்டாம்” என்ற கோணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விடையம் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் உண்மையானால், இலங்கை அரசு, அமெரிக்காவுடன் ஒரு இணக்கத்துக்கு வருவதற்கான முயற்சிகளை செய்கிறது என்ற தகவலுடன் இதையும் இணைத்துப் பார்க்கலாம். இந்த தந்திரம், அவர்களுக்கு சாதகமாக வேலை செய்யுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கும் இலங்கை அரச குழுவில் இன்றைய தேதிவரை, இலங்கை ராணுவ அதிகாரிகள் எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


Geen opmerkingen:

Een reactie posten