யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு கொடிகாமம் பாலாவியில் மகாசிவராத்திரி வழிபாட்டிற்காகச் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்ற பாலாவி வடக்கைச் சேர்ந்த கந்தையா ஜெகதீஸ்வரன் (வயது-27) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.
ஆலயத்தில் மூவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் இடியன் கட்டுத்துவக்கைப் பயன்படுத்தியே குறித்த நபர் சுடப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக சாவகச்சேரி வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten