இந்தப் புகைப்படங்கள் பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி புறப்பட்ட தொடருந்தில் இருந்து எடுக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தப் புகைப்படங்கள் எடுத்தவர் ராணுவ சதிக்கும்பலுடன்தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து நாம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்புகொண்டு யாரும் தனி நபர்கள் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப் பட்டனரா என்று கேட்டிருந்தோம், ஆனால் தாங்கள் யாரையும் புகைப்படங்கள் எடுக்க அனுமதியளிக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் ஒரு சிலர் கைத்தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இலங்கை அரசு தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு பல வழிகளில் முயன்று வரும் வேளையில் அதற்கு நாமே துணை போகிறோமா? எத்தனையோ மாவீரர்கள் இந்த மண்ணுக்காக தமது உயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். ஒரு நிமிடம் இவர்களைப் பற்றி சிந்தியுங்கள், இவர்களும் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம் தானே? இவர்கள் என்ன இறப்பதட்கென்றே பிறந்தவர்களா? இவர்கள் கண்ட தமிழீழ கனவை நிறைவேற்றப் போவது யார்?
http://www.tamilkan.com/
Geen opmerkingen:
Een reactie posten