தற்போது தமிழ் மக்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகளை அறிந்து கொள்வதற்காக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி; ஜேக்கப் சரிக் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு வருகை தந்தனர்.
யாழ்ப்பாணத் தீவகங்களில் ஒன்றாகிய நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கும் நேரில் சென்ற அவர், நேற்று வியாழன் மாலை வவுனியாவுக்கு வந்தார்.
இவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினருடன் எழுத்தாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சண் மாஸ்ரர் ஆகியோர் சந்தித்து போருக்குப் பின்னர் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின் போது வடபகுதி மக்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் துயரங்கள் பற்றி தாங்கள் அமெரிக்க அரசியல்துறை அலுவலரிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்த அருட்தந்தை ஜெபமாலை, காணாமல் போனவர்கள் தொடர்பிலான நிலைமைகள் குறித்து தங்களிடம் அவர் விவரமாக கேட்டறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார்.
வடபகுதி மக்கள் இராணுவ தலையீடு காரணமாக பெரும் அச்சமானதொரு சூழலில் வாழ்வதாகவும், அவர்களது அச்சநிலை போக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் சுதந்திரமாகவும் அரசியல் உரிமைகளுடனும் வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் கேட்டுக்கொண்டதாகவும் அருட்தந்தை ஜெபமாலை தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்இ இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான பொறுப்பு கூறுதல், மனித உரிமை நிலைமைகள் என்பவற்றில் நடைமுறைச் செயற்பாட்டுடன் கூடிய வகையில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் இவரைச் சந்தித்து தமது காணாமல் போனோர் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
http://www.tamilwin.net/show-RUmryDTbNYjp1.html
Geen opmerkingen:
Een reactie posten